விவசாயிகளுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் 4 நாட்களுக்கு! தமிழக அரசு அறிவிப்பு!
Tamilnadu Government: விவசாயிகள் விபரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, 28.12.2024 முதல் 31.12.2024 வரை தமிழ்நிலம் இணையவழி பட்டா மாறுதல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
பொது மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை பெறலாம். உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் ஊரகம், நகரம் என தனித்தனியாக மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியலாம். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே செலுத்த முடியும். இந்த அளவிற்கு வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க: பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ரூ.2000ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா?
ஸ்கேன் செய்த கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்யலாம். தமிழக மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள் முக்கிய அரசாணைகள் சுற்றறிக்கைகள், பரப்பளவு, அளவு மாற்றங்கள் போன்றவைகளை இணைதளம் மூலம் அறியலாம்.
அதேபோல் தமிழ் நிலம் வெப்சைட்டில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகள், பூங்கா போன்றவையும் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் பதிவுசெய்யப்படுகிறது. இதனால், அரசுநிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கப்படுகிறது. இந்நிலையில் புதிய அப்டேட் செய்ய உள்ளதால் இணையவழி பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் எதிரொலி! அனைத்துக் கல்லூரிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு!
இதுதொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் 28.12.2024 காலை 10:00 மணி முதல் 31.12.2024 மாலை 4:00 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ”தமிழ்நிலம்” (https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html) இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.