All College Student: சென்னையில் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து மாணவிகளும் 'காவல் உதவி' செயலியைப் பதிவிறக்கம் செய்ய உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி ஞானசேகரனை கைது செய்த போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி! ஜனவரி 1ம் தேதி டோட்டலா மாறுது! இதோ முழு விவரம்!
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ரூ.2000ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா?
அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
