காவரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதனை சுற்றியுள்ள 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 83.83 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போல் கபினி அணையிலிருந்து 32 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

காவரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஒகனேக்கலுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒகனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் அம்போ..? ஓபிஎஸ் இடத்தில் திண்டுக்கல்காரர்கள்.? இபிஎஸ் சாய்ஸ் யார்?

இதே போல் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. 120 அடி நீர்மட்டம் எட்டி, நிரம்பிய அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு மெல்ல மெல்ல அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க:பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு வீடியோ.. வன்முறையாளர் மீது கடும் நடவடிக்கை .. டிஜிபி பரபரப்பு பேட்டி..

இன்று காலை நிலவரப்படி, அணையிலிருந்து 1.28 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு 23 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றபடுகிறது. உபரி நீர் போக்கி வழியாக 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றபடுவதால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1.24 லட்சம் கன அடி வந்துக்கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை எப்படி உள்ளது..? எப்போது வீடு திரும்புவார்.. மருத்துவமனை அறிக்கையில் தகவல்

இந்நிலையில் இன்று ஆடி முதல் நாள் என்பதால் காவிரி ஆற்றில் நீராட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சேலம் கேம்ப், காவிரி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து, வாகனங்களில் வரும் மக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கூட்டத்தை கட்டுபடுத்த போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், அதனை சுற்றியுள்ள 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.