பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு வீடியோ.. வன்முறையாளர் மீது கடும் நடவடிக்கை .. டிஜிபி பரபரப்பு பேட்டி..
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவியின் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு முன் ஆசிரியர்களை கைதுசெய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பிளஸ்2 பள்ளி மாணாவி ஸ்ரீமதி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையி இன்று மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய நிலையில், சாலைமறியல் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. பள்ளிக்கும் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த நிலையில், காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தேறியுள்ளது.
இதில் காயமடந்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறயினர் வாகனங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், தீ வைத்துள்ளனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், தொடர்ந்து போராட்டக்காரர்க்ள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், போராட்டத்தை நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது. கலவரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்றப்பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் அமைதிக்காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வன்முறையின் வீடியோ பதிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அமைதியாக தொடங்கிய போராட்டம் திடீரென கலவரமாக மாறியுள்ளது. காவல்துறையினரை தாக்குவது, காவல்துறை வாகனங்களை எரிப்பது என்பது குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவியின் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு முன் ஆசிரியர்களை கைதுசெய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.