Asianet News TamilAsianet News Tamil

OPS: நீச்சல் குளத்தை உடனே சுத்தம் செய்யுங்க; அமீபா தொற்றால் 97% உயிரிழப்பு ஏற்படுமாம்; அலர்ட் செய்யும் ஓபிஎஸ்!

அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் அமீபா தொற்று, கர்நாடக மாநிலத்தை மிரட்டும் டெங்கு போன்றவை தமிழ்நாட்டில் பரவாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

OPS request to take measures to protect against Amoeba infection KAK
Author
First Published Jul 9, 2024, 9:14 AM IST | Last Updated Jul 9, 2024, 9:51 AM IST

கேரளாவில் அமீபா தொற்று

கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் 97 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 

Amoeba : ஆற்றிலோ குளத்திலோ குளிக்க போறீங்களா.? காத்திருக்கிறது அமீபா.!! எச்சரிக்கும் தமிழக சுகாதாரத்துறை

OPS request to take measures to protect against Amoeba infection KAK

நீச்சல் குளத்தை சுத்தம் செய்திடுக

தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை அமீபாவின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது, அதில் குளிப்பவர்களுக்கு அமீபா என்னும் உயிரி மூலம் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்தத் தொற்று நோய், சுகாதாரமற்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக உடலுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதால்,

தமிழ்நாட்டில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது மூக்கு கிளிப் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தவும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். 

OPS request to take measures to protect against Amoeba infection KAK

டெங்கு பரவலை கட்டுப்படுத்திடுக

இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் அடைப்பு.!! எப்போ தெரியுமா.? மது பிரியர்களுக்கு ஷாக் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios