Amoeba : ஆற்றிலோ குளத்திலோ குளிக்க போறீங்களா.? காத்திருக்கிறது அமீபா.!! எச்சரிக்கும் தமிழக சுகாதாரத்துறை
நீரில் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதால் கலங்கலான, மாசு உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அமீபா தாக்குதல் எச்சரிக்கை
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் குளித்தவர்களின் சுவாசத்தின் வலியாக மூளையை பாதிப்படைய செய்கிறது. இதனையடுத்து தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிருதுல், கண்ணூரை சேர்ந்த 13 வயதான தாக்ஷினா, லப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
Health News-Amoeba quietly eats human brain
ஏரிகளில் குளங்களில் குளிக்க போறீங்களா.?
இந்த பாதிப்பு ஏற்பட்ட 100 சதவிகித நபர்களில் 97 சதவிகிதம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்படு தடுப்பிக்கான மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரிய வகை மூளை தொற்று நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீச்சல் குளங்களை சுத்தமாக வைத்திருங்கள்
அதில், கேரளாவில் இந்த நோய் தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நீரில் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதால் கலங்கலான, மாசு உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் நீர் நிலைகளை சுத்திகரிக்க வேண்டும். பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள நீச்சல் குளங்களை பொது சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுத்திகரிக்க வேண்டும்.
நோய் அறிகுறி எச்சரிக்கை
ஊரக பகுதியில் உள்ள நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அனுமதி இன்றி நுழைவதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மையங்களில் இந்த நோய் தொற்று பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.