பொங்கல் பரிசாக 2000 ரூபாய்.! முதலமைச்சருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் இடம்பெறவில்லை. இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

OPS request to give 2000 rupees as Pongal gift package KAK

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் பணம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன.

உதாரணமாக, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2022 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவின்போது 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்து, இதில் பாதி பொருட்கள்கூட விநியோகம் செய்யப்படவில்லை என்றும், விநியோகம் செய்யப்பட்ட பொருட்களும் பயனற்றவையாக இருந்தன என்றும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் பொருட்களை சாப்பிட்டு பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்பதையும் இந்த நாடு அறியும்.

OPS request to give 2000 rupees as Pongal gift package KAK

திமுக அரசின் பொங்கல் பரிசுகள்

இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், 2022 ஆம் ஆண்டு செய்த தவறுக்கு பரிகாரம் காணும் வகையில் 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. 2024 ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், நான் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையிலும், 2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், 

1000 ரூபாய் பணப்பரிசு இல்லை

சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், பாதிக்கும் மேற்பட்டோருக்கு 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை. தற்போது, 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

OPS request to give 2000 rupees as Pongal gift package KAK

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாக சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினை சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2000 ரூபாய் பொங்கல் பரிசு

தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புற கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios