MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவை மக்களுக்கு நல்ல செய்தி..! ரியல் எஸ்டேட் வளருது.. பாலக்காடு ரோட்டில் நிலத்தை வாங்கிப்போடுங்க

கோவை மக்களுக்கு நல்ல செய்தி..! ரியல் எஸ்டேட் வளருது.. பாலக்காடு ரோட்டில் நிலத்தை வாங்கிப்போடுங்க

கோவை மேற்கு பைபாஸ் சாலையின் முதல் கட்டம், மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இது சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 13 2026, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கோவை ரியல் எஸ்டேட் வளர்ச்சி
Image Credit : Google

கோவை ரியல் எஸ்டேட் வளர்ச்சி

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கிய திட்டமாக கருதப்படும் கோவை மேற்கு பைபாஸ் சாலை (கோவை மேற்கு ரிங் ரோடு) திட்டத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.43 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகருக்குள் செல்லாமல் புறவழியாக பல முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த சாலை, கோவை நகர வளர்ச்சிக்கு முக்கியமான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கோவை மேற்கு ரிங் ரோடு
Image Credit : Google

கோவை மேற்கு ரிங் ரோடு

இந்த திட்டம் மூன்று பேக்கேஜ் முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதில் முதல் கட்டமாக மயில்கல் முதல் மாதம்பட்டி வரை சுமார் 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ரூ.250 கோடி மதிப்பில் செய்யப்பட்ட இந்தப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. ரோடு மார்க்கிங், சாலை பெயர் பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்ததால், சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

இந்த புதிய பைபாஸ் சாலை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் கோவை புதூர், சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், பேரூர், செட்டிபாளையம், பச்சாபாளையம் மற்றும் மாதம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்யும் வசதி உருவாகியுள்ளது. நகர போக்குவரத்தைத் தவிர்த்து இந்த பகுதிகளுக்கு விரைவாக செல்வது சாத்தியமாகும்.

33
கோவை பைபாஸ் சாலை
Image Credit : Google

கோவை பைபாஸ் சாலை

மேலும், இந்த சாலை மூலம் சிறுவாணி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி மலை, ஈஷா யோகா மையம், வைதேகி நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கும் நேரடியாக செல்ல முடியும். மேலும் மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த பைபாஸ் சாலை மிகவும் உதவியாக இருக்கும். இதனால் கோவை–பாலக்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாலை திறப்பு, சுற்றுப்புற பகுதிகளின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பேரூர், மாதம்பட்டி, சுண்டக்காமுத்தூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் வீட்டு திட்டங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு திட்டங்கள் அதிகரிக்கும். கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டப் பிரிவு பொறியாளர்கள் பல சவால்களை சமாளித்து பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், நீண்ட காலமாக இந்த பைபாஸ் சாலை திறப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
ரியல் எஸ்டேட்
நெடுஞ்சாலை
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
திருச்செந்தூர் அரச ஆழ்வார் விநாயகர் கோவில் விவகாரம்: அறநிலையத்துறைக்கு எதிராகப் போராட்டம்!
Recommended image2
Now Playing
மதுராந்தகத்தில் களமிறங்கிய விஜய் : அலை போல் திரண்ட மக்கள் கூட்டம் - தேர்தல் பிரசார காட்சிகள்!
Recommended image3
Eesal Insect: ஈசல் ஆயுசு ஒரு நாள் மட்டும்தானா? இரவில் ஒளியைச் சுற்றி பறப்பதன் பின்னணி தெரியுமா?
Related Stories
Recommended image1
Now Playing
தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
Recommended image2
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? உண்மையை போட்டுடைந்த இந்திய ஆயில் நிறுவனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved