MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? உண்மையை போட்டுடைந்த இந்திய ஆயில் நிறுவனம்!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? உண்மையை போட்டுடைந்த இந்திய ஆயில் நிறுவனம்!

Fuel Shortage: தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 25 லிட்டர் கேன்கள் பிடித்து சென்றனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 13 2026, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : x

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதுபோன்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் விலை உயரப்போகவதாக தகவல் வெளியானது.

26
Image Credit : ChaGPT

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 25 லிட்டர் கேன்கள் பிடித்து சென்றனர். ஆனால் எண்ணைய் நிறுவனங்கள் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக தகவல் உண்மையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது குண்டர் சட்டம்.. சட்டம் சொல்வது என்ன? இதை படிங்க!
Related image2
தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!
36
Image Credit : X

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IndianOil) தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புடன் உள்ளன. சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.

46
Image Credit : Asianet News

எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியஆயில் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, எரிபொருள் கிடைப்பதை வழக்குநிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்குமாறு இந்திய ஆயில் கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது.

56
Image Credit : Asianet News

மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியஆயில் வலியுறுத்துகிறது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லா கிடைப்பையும் உறுதி செய்வதில் இந்தியஆயில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

66
Image Credit : Google

மேலும், தமிழ்நாட்டில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் M.அண்ணாதுரை தெரிவித்ததாவது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை பெட்ரோலிய முனையங்களிலும் (IOC, BPC & HPC) போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்த பிறகும் தஞ்சாவூர், தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பி செல்கின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஈரான்
பெட்ரோல்
பெட்ரோல் டீசல் விலை
தமிழ்நாடு
சென்னை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது குண்டர் சட்டம்.. சட்டம் சொல்வது என்ன? இதை படிங்க!
Recommended image2
Now Playing
தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
Recommended image3
தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது குண்டர் சட்டம்.. சட்டம் சொல்வது என்ன? இதை படிங்க!
Recommended image2
தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved