MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Heatwave: வேலூர், ஈரோடு, மதுரை, கரூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி மண்டையை பொளக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 13 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மண்டையை பொளக்கும் வெயில்
Image Credit : our own

மண்டையை பொளக்கும் வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அதாவது வேலூர், ஈரோடு, மதுரை, கரூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி மண்டையை பொளக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்ககும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : our own

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? உண்மையை போட்டுடைந்த இந்திய ஆயில் நிறுவனம்!
Related image2
சிஎம் கனவு வேஸ்ட்.. அறிவில்லாத ஆதவ் அர்ஜூனா.! விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் பகிரங்க எச்சரிக்கை.!
35
ராமநாதபுரம் தூத்துக்குடியில் மழை எச்சரிக்கை
Image Credit : Google

ராமநாதபுரம் தூத்துக்குடியில் மழை எச்சரிக்கை

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 16ம் தேதி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

45
மார்ச் 17 மழை வார்னிங்
Image Credit : Asianet News

மார்ச் 17 மழை வார்னிங்

மார்ச் 17ம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன், கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : ANI

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
Now Playing
எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..
Recommended image3
கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? உண்மையை போட்டுடைந்த இந்திய ஆயில் நிறுவனம்!
Recommended image2
சிஎம் கனவு வேஸ்ட்.. அறிவில்லாத ஆதவ் அர்ஜூனா.! விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் பகிரங்க எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved