Asianet News TamilAsianet News Tamil

ஆவின் பாலில் டீ,காபி தான் போட முடியும்..! ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது..! அண்ணாமலைக்கு மா.சு பதிலடி

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கொள்முதல் செய்வதில் ரூ.77 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு, ஆவின் பாலில் டீ,காபி தான் போட முடியும்..! ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

Only tea and coffee can be put in the milk of the spirit  Health Mix Cant Make It Ma Subramanian retaliates for Annamalai
Author
Chennai, First Published Jun 6, 2022, 1:14 PM IST

ஊட்டச்சத்து டெண்டரில் முறைகேடு

தமிழக அமைச்சர்களின்  சொத்துக்குவிப்பு ஊழல்களை  பட்டியலிட்டு ஆதாரபூர்வமான ஆவணங்கள் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். தமிழ்நாடு அரசு சார்பில் 28 லட்சத்து 88 ஆயிரம் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதாகவும் இந்த தொகுப்பில் அதிக விலை உள்ள ஹெல்த் மிக்ஸ்-க்குப் பதிலாக 60 சதவீதம் விலை குறைந்த ஆவின் ஹெல்த் மிக்சை சேர்க்க முதலில் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே இந்த டெண்டரில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்து இருந்தார். இந்த புகார்  தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Only tea and coffee can be put in the milk of the spirit  Health Mix Cant Make It Ma Subramanian retaliates for Annamalai

டீ,காபி தான் ஆவின் பாலில் போட முடியும்

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், கர்ப்பிணிகளுக்கான  ஊட்டச்சத்து தொடர்பாக தங்களது விளக்கங்களை தெரிவித்தனர். அதில், 2018 முத்துலட்சுமி மகப்பேறு திட்டம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அதில் 10% ஊட்டச்சத்து பொருட்களாக வாங்கி வழங்கப்பட்டு வருகிவருவதாக தெரிவித்தார்.இதற்காக 450கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆனால் கொரோனா காலமாக இருப்பதால் வாங்கப்படவில்லை, இந்த தொகை மீண்டும் அரசுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர் ஆவினில் உள்ள பால் மூலம் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது, கர்ப்பிணிகளுக்கு பொருத்தமானதாக இருக்காது, ஆவின் பால் மூலம் டீ,காபி தான் போடப்படும், ஹெல்த் மிக்ஸ் பவுடராக இருக்காது என தெரிவித்தார். சந்தை விலையை விட குறைவான விலைக்கு தான்  அரசு கொள்முதல் செய்கிறது என்றும் இதற்காக 11 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Only tea and coffee can be put in the milk of the spirit  Health Mix Cant Make It Ma Subramanian retaliates for Annamalai

குறைவான விலைக்கு கொள்முதல்

ஹெல்த் மிக்ஸ் பொருளில் 32 சத்துக்கள் உள்ளடக்கியதாக உள்ளது,  இந்த பொருட்கள் ஆவினில் தயாரிக்க முடியுமா என்று ஆவின் நிறுவனத்துடன் 2 ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆவின் தயாரிக்கும் பால் பொருட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. இதனை ஆய்வக்கத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை அரசுக்கு சமர்பிக்க வேண்டும் அதன் பிறகு அரசு முடிவு செய்யும், டெண்டர் துவங்கவில்லை என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
கர்ப்பிணிகளுக்கான ஹெல்த் மிக்ஸ் குற்றச்சாட்டு ஆப்பிளையும் - எழுமிச்சையையும் ஒப்பிடுவது போன்ற குற்றச்சாட்டு என தெரிவித்தார்.ஹெல்த் மிக்ஸ் பவுடர் சந்தை விலை - ரூ. 588. கொள்முதல் விலை - ரூ 460.50 இதற்கு இடையில் வித்தியாசம் வித்தியாசம் - ரூ127.50 என கூறினார். அயன் சிரப் சந்தைவிலை - ரூ 112, கொள்முதல் விலை - ரூ  74.60,வித்தியாசம் - ரூ. 37.35 உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

பணத்தை வைத்து சாதிக்க நினைக்கிறார் சசிகலா..! அதிமுகவில் இடம் இல்லை,பாஜகவிற்கு செல்லட்டும்- ஜெயக்குமார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios