Asianet News TamilAsianet News Tamil

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கொடுத்த வார்னிங்

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Omni bus owners protest toll hike in Tamil Nadu KAK
Author
First Published Sep 2, 2024, 6:28 AM IST | Last Updated Sep 2, 2024, 9:25 AM IST

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

நாட்டில் உள்ள சுங்கச்சாவடி கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 67 சுங்கச் சாவடிகளில் இரண்டு தவனையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை பொறுத்தவரை விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்ப 25 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டது.

குறிப்பாக   5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இந்த உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சுங்க கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என அச்சம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் சுங்க கட்டண உயர்வுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதிப்பு- கட்டண உயர்வு திரும்ப பெறுக

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செப்டம்பர் 1 முதல்  அமலுக்கு வந்துள்ளது. அதனால் 5 முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு  முன் இருந்த கட்டணத்தை விட கூடுதலாக 5 ரூபாய்  முதல் 150 ரூபாய்  வரை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. இதே போல கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது.  

இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் ஆகையால் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு காலாவதியான டோல்கேட்களை அப்புறப்படுத்தும் படியும் தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ள டோல்கேட் கட்டணத்தை திரும்பப் பெறுமாறும் மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே  தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Power Shutdown : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின் தடை தெரியுமா.? இதோ லிஸ்ட்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios