Power Shutdown : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின் தடை தெரியுமா.? இதோ லிஸ்ட்
மின்பாதை பராமரிப்பு பணிக்காக தினந்தோறும் ஒவ்வொரு இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று மேற்கு தாம்பரத்தில் மின் தடைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் மின் தடை
மின்சாரம் மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. சமையல் முதல் அத்தியாவசிய பணிகள் அனைத்திற்கு மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் புதிய மின்சார கம்பம் அமைக்கவும், மின்பாதை சரிபார்க்கவும் சீரமைப்பு பணிகள் ஒரு சில பகுதிகளில் தினமும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று மின் தடை செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. .
Power cut
பராமரிப்பு பணி
பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (02.09.2024) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் பக்தர்களுக்கு அன்லிமிடட் லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு
மேற்கு தாம்பரம் :
குளக்கரை, திருவங்கடம் நகர், மேலந்தை தெரு, தெற்கு தெரு, பூர்ணதிலகம் தெரு, கல்யாண் நகர், வைகை நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணிக்கு மின் தடை செய்யப்படவுள்ளது