சென்னையின் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், வேளச்சேரியின் பழைய மேப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, வண்டலூர், முடிச்சூர், சைதாப்பேட்டை, மாம்பலம், அண்ணாநகர், ஆவடி, என சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 3 நாட்களாகியும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஏரிகள், குளங்கள் இருந்த பகுதிகளை ஆக்கிரமித்து இப்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளதே இந்த வெள்ளத்திற்கு காரணம என்பது நம் அனைவருக்கும் தெரியும். சென்னையில், சேரி, பாக்கம் என்ற முடியும் பகுதிகள் எல்லாமே ஏரி, குளங்கள் கொண்ட நீர் நிலை பகுதிகள் தான். உதாரணமாக காரப்பாக்கம், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகள் ஒரு காலத்தில் நிறைய ஏரிகள் கொண்ட இடங்களாக இருந்தன.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அந்த வகையில் வேளச்சேரி என்பது அதிக ஏரிகள் கொண்ட இடமாகும். 100 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த பகுதியில் பல ஏரிகள் இருந்த நிலையில் அவை அனைத்தும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. காலப்போக்கில் இந்த இடம் முழுவதுமே ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாறி உள்ளன. இதன் காரணமாகவே சென்னையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பெய்த அதிகனமழையால் வேளச்சேரி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேளச்சேரியின் பழைய மேப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி 1980-ம் ஆண்டு வேளச்சேரி பகுதி தற்போது 2023-ல் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளதும், நீர் பகுதிகள் சுருங்கி உள்ளதையும் அதில் பார்க்க முடிகிறது.
இப்படி ஏரியாக இருந்த பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் சென்னை எப்படி வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை தற்போது மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 42 மணி நேரத்தில் இடைவிடாது பெய்த தொடர் கனமழையே வெள்ளத்திற்கு காரணம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள வெள்ள நீர் அகற்றப்படவில்லை என்றும் இன்னும் மின்சார வசதி வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
