ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. விட்டதை பிடிக்க இபிஎஸ்க்கு விடாமல் குடைச்சல்..!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எப்படியாவது இரட்டை இலையை மீட்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்ற முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எப்படியாவது இரட்டை இலையை மீட்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்ற முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு முடிவெடுக்க வேண்டும்.
எனவே, 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், எங்களின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்காத நிலையில், இரட்டை இலை சின்னம் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு: இபிஎஸ்சுக்கு எதிராக அமைய வாய்ப்பு?
எனவே தேர்தல் ஆணையம் இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக தலையிட்டு, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில் திறம்பட பங்கேற்கும் வகையில், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.