அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

AIADMK symbol and flag case.. Chennai High Court to judgment on Monday tvk

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலவாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

AIADMK symbol and flag case.. Chennai High Court to judgment on Monday tvk

இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்காலக் கோரிக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள பிரதான வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர். பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தான் கட்சியிலிருந்து சிலரை நீக்கியதாகவும், அதற்குத் தனக்கு உரிமை உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு: இபிஎஸ்சுக்கு எதிராக அமைய வாய்ப்பு?

மேலும், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காகக் கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென்றே விரும்புவதாகவும், அதற்குத் தொண்டர்களைச் சந்திப்பதற்கான சுதந்திரம் தனக்கு வேண்டுமெனவும் ஓபிஎஸ் சார்பில் வாதிடப்பட்டது. கட்சியின் சின்னம், கொடியைப் பயன்படுத்தத் தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகப் ஓபிஎஸ் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

AIADMK symbol and flag case.. Chennai High Court to judgment on Monday tvk

பின்னர், இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் இடைக்காலக் கோரிக்கையை நிராகரிக்கும் போது பிரதான வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறை தான். ஓபிஎஸ் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:  எங்க கூட்டணி கட்சி தலைவரே கொல்ல பாத்துட்டாங்களே! காக்கியை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்? EPS!

AIADMK symbol and flag case.. Chennai High Court to judgment on Monday tvk

ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தன்னை அழைத்துக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைத் தான் எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் அழைத்துக்கொள்ளட்டும் என இபிஎஸ் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios