வடமாநில தொழிலாளர்கள் போலி வீடியோ விவகாரம்: யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது போல வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது

North state workers attack fake video issue case against youtuber manish kashyap cancel smp

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது போல வீடியோ வெளியிட்ட பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் அண்மையில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவதூறாக வீடியோ பரப்பியதாக பீகாரைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா? தமிழிசை கேள்வி!

இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான மணீஷ் காஷ்யப் என்பவர் சினிமா படப்பிடிப்பு போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி அதில் சிலரை நடிக்க வைத்து வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்து அதனை பரப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த தமிழக போலீசார், நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார், இதனை எதிர்த்து டெல்லியை சேர்ந்த அவரது சகோதரர் திரிபுவன் குமார் திவாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, காவல்துறை உரிய விதிகளை பின்பற்றி கைது செய்யவில்லை என கூறி, மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம், மதுரை சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios