Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா? தமிழிசை கேள்வி!

முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

Do Chief Ministers give Governors the respect they deserve tamilisai soundararajan question smp
Author
First Published Nov 10, 2023, 4:50 PM IST | Last Updated Nov 10, 2023, 4:50 PM IST

முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா என பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர்களின் பணிகளை செய்ய விடுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் உத்தரகாண்ட் மாநில உதய நாள் கொண்டாட்டப்பட்டது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான ஜோடா சாச்சேரி என்ற நாட்டுப்புற நடனத்திற்கு மாநில மக்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினார். மாநிலத்தின் கலை நிகழ்ச்சிகளும் பாடல்களும் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தீபாவளியை மத்தாப்பை போல ஒலி மலர்ந்து நமக்கு கிடைக்கின்ற தீபாவளியாக மக்கள் கொண்டாட வாழ்த்துக்கள் என கூறினார்.

தீப ஒளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் பட்டாசு வெடித்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என  தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கிச்சை நிலவரத்தை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அவசரப்பட்டு நிறுவனத்தை திறக்க வேண்டாம். பாதுகாப்பு குறித்து உறுதி செய்த பிறகு திறக்க அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளோம். தொழிற்சாலையில் விபத்து குறித்தும் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கைகள் வந்தவுடன் விபத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடலாமா என்ன முடிவு செய்யப்படும். தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது - உச்ச நீதிமன்றம்!

ஆளுநர்களுக்கு நீதி கிடைக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும் என தெரிவித்த தமிழிசை, “தேவைப்படும் நேரத்தில் முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பேசலாம். அது இங்கு சரியாக நடக்கிறது. முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா என பார்க்க வேண்டும். ஆளுநர்களின் பணிகளை செய்ய விடுவதில்லை.” என குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக இருந்தாலும் பொறுப்புள்ள ஆளுநராக புதுச்சேரிக்கும் தெலுங்கானாவிற்கும் இருந்து வருகிறேன். என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கூறமுடியாது எனவும் தமிழிசை அப்போது தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios