Asianet News TamilAsianet News Tamil

பிடிஆர் பதிலை திமுக ஐடி விங்கை தவிர யாரும் நம்பமாட்டார்கள்: அண்ணாமலை

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ட்விட்டர் பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக பதில் அளித்துள்ளார்.

No one would believe, Except DMK IT Wing Dimwits: Annamalai
Author
First Published Apr 22, 2023, 10:39 PM IST | Last Updated Apr 22, 2023, 11:01 PM IST

தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் அளித்த விளக்கத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக ட்விட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு நாட்களாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக வலைதளங்களில் அரைகுறையாகக் கூறிவந்ததை படித்துவிட்டு இந்த அறிக்கையாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். நிதி அமைச்சர் திமுகவின் ஐடி பிரிவினர் செய்த போலி ஆடியோ பகுப்பாய்வை தன் தற்காப்புக்காகப் பயன்படுத்தியுள்ளார். இது அவரது பலவீனத்தையே காட்டுகிறது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Breaking: மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திமுகவின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களைத் தவிர, வேறு யாரும் நிதி அமைச்சரின் இந்தத் தற்காப்பு பதிலை நம்ப மாட்டார்கள். அந்த ஆடியோ பற்றி சுதந்திரமான தடயவியல் ஆய்வுக்கு அழைப்பு விடுப்பதில் இருந்து நிதி அமைச்சரை தடுப்பது எது? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஏப்ரல் 19ஆம் தேதி,  2023 அன்று சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ திமுகவினரை திகைக்க வைத்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த ஆடியோ பற்றி தமிழக  நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் சம்பாதித்ததாக அவர் குற்றம் சாட்டியதாக பேசி இருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios