Asianet News TamilAsianet News Tamil

19 நிமிடம் நிதானமாக பேசிய பேராசிரியை! மசியாத மாணவிகள்... சிக்கபோவது யார் யார்? முழுமையாக படிங்க...

Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution
Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution
Author
First Published Apr 16, 2018, 4:32 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


நீ அந்தமாதிரி நடந்துக்கிட்டாத்தான்.. மார்க் மட்டுமில்ல.. ஃபினான்சியலாவும் உங்களுக்கு கிடைக்கும் என தனது மகள்கள் வயதில் இருக்கு பேராசிரியை நிர்மலா தேவி புரோக்கராக மாறி பேசியிருக்கும் ஆடியோ வலைதளங்களில் பரவிவருகிறது.

095241 36928 என்ற எண்ணில் இருந்து  ஒரு மாணவிக்கு அழைப்பு வந்திருக்கிறது, அதில் பேராசிரியை நிர்மலா தேவி அந்த மாணவியிடம்  வீட்ல பெரியவங்க யாரும் இருக்காங்களா? என கேட்க இல்ல மேம் இல்ல என அந்த மாணவி சொல்ல, இல்லைல்ல என பேராசிரியை தனது பேச்சை தொடங்குகிறார்.

Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution

நிர்மலா; இப்ப நான் யுனிவர்சிடிக்கு வர்றேன்.. பண்ணிக்கிட்டிருக்கேன்னு தெரியும்ல.. இப்ப வந்து.. இங்கே.. பெரிய ஹையர் அஃபிசியல்.. ஏன்னா எல்லாருடைய சீக்ரெட்டும்.. இதுல ரொம்ப முக்கியம்.. நான் இப்ப சொல்லுற விஷயங்கள் வந்து ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா இருக்கக்கூடியது.. நாம வந்து.. இதுவரைக்கும் டீச்சர் அன்ட் ஸ்டூடண்ட் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கோம். இப்ப அடுத்த லெவல் போறதுக்கு.. உண்டான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்குது. அகடமிக் சைடு இதுவரைக்கும் எந்த அளவுக்கு உங்களுக்கு சப்போர்டிவா இருந்திருக்கேனோ.. அதே மாதிரி ஒரு ஆபர்சூனிடி வருது. ஆபர்சூனிட்டி வருதுன்னு சொல்லுறப்ப.. ஸ்பீக்கர் போட்டிருக்கியா? எப்படி? என புரோக்கர் நிர்மலா தேவி பேச

அதற்கு அந்த மாணவி,  இல்ல மேம்.. நான் மட்டும்தான் கேட்கிறேன்.

 நீ ஸ்பீக்கர்ல போடு.. நாலு பேரும் கேளுங்க..” ஸ்பீக்கர்ல போட்டுட்டேன் மேம்...

ம்ம்.. உங்க நாலு பேரும்.. அந்த ஆபர்சூனிட்டி வந்து.. சில விஷயங்கள் நாம சீக்ரெட்டாத்தான் பண்ண வேண்டியிருக்கு. அப்படி சீக்ரெட்டா பண்ணுறதால உங்களுடைய அகடமிக் சைடுலயும் உங்கள பெரிய லெவலுக்கு கொண்டுபோக முடியும். வித் அவுட் எனி டிஃபிகல்ட்டிஸ்,  என்னால அஸ்யுர் பண்ண முடியும். அந்த அளவுக்கு ஹையர் அஃபிசியல்ஸ்.. எம்.கே.யுனிவர்சிடிய பொறுத்தவரைக்கும்..” என கட்டிலுக்கு அனுப்ப பிளான் போடும் இந்த புரோக்கர் பேச

என்னவென்றே புரியாத அந்த மாணவி நாங்க என்ன மேடம் பண்ணனும்? என கேட்கிறார்.

நீங்க என்ன பண்ணனும்னா.. அவங்க வந்து.. சில விஷயங்கள், சக்சஸ்ஃபுல்லா முடிக்கிறதுக்கு.. நீங்க வந்து.. உங்கள  அவங்க சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறாங்க. இதுவரைக்கும் அந்த லெவலுக்கு நான் இறங்கினது இல்ல. இந்த அளவுதான் என்னால சொல்ல முடியுது. சில விஷயங்கள் நான் சொல்லுறத.. நீங்க வந்து ஈஸியா புரிஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. சில விஷயங்கள்ல.. அவங்க உங்ககிட்டருந்து எக்ஸ்பெக்ட் பண்ணுறாங்க. இதுவந்து ரொம்ப நாளா என் கிட்ட கேட்டுக்கிட்டு இருக்காங்க. அதற்கு முன்னால ஒரு தடவை பேப்பர் வேல்யூசனுக்காக வந்தேன் பார்த்தியா.. திடீர்ன்னு ரெண்டு நாள் நானும் நாகராஜன் சாரும் OD.ல வந்திருந்தோம்ல.

Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution

அந்த சந்தர்ப்பத்துல என்கிட்ட.. ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டாங்க.. ஏன்னா நம்ம காலேஜ்ல.. உங்களோட ஹோல் லைஃப் தெரியும் எனக்கு (மாணவிகளின் குடும்ப சூழலை அந்த மாணவிகளுக்கு சொல்கிறார்)  ஏன்னா.. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சதுனா.. கண்டிப்பா வந்து.. இதுல யார் யாரு இன்வால்வ் ஆகியிருக்காங்களோ.. அவங்களுக்கு நெகடிவ் வர்றதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. எனக்கு இங்கே வந்து அவங்க சில அஷ்யூரன்ஸ் கொடுத்திருக்காங்க. அதை பேஸ் பண்ணி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயி.. இன்னும் ஒன்றரை மாசம்தான்.. அப்ப வந்து பிராக்டிகல்ஸ் முடிஞ்சிரும்.. என்ன தேதி உங்களுக்கு சொல்லியிருக்காங்க..? என அந்த மாணவிகளிடம் அடுத்த கேள்வியை முன்வைக்க

அதற்கு அந்த மாணவி 19-ஆம் தேதி.. திங்கட்கிழமை மேம் என சொல்ல,

19 தான.. அதுக்குள்ள உங்களுக்கு கை வைக்கக்கூடிய மெயினானது முடிஞ்சிரும். அதனாலதான்.. இந்த சந்தர்ப்பத்தை என்னால ஷார்ப்பா பேச முடியுது. நல்ல வேளை.. அதை வந்து நான் பண்ணுறேன்னு சொல்லிருந்தாக் கூட ஏப்ரல் வரைக்கும் போயிருக்கும். இப்ப வந்து மொதல்லயே முடிஞ்சிருது. இனிமே தியரிதான். தியரியில்கூட உங்க மார்க்ல கை வைக்காத அளவுக்கு என்னால பண்ண முடியும்கிற கான்பிடண்ட் வந்ததுனாலதான்..

நான் இந்த ஸ்டெப்பை எடுக்க ஆரம்பிக்கிறேன். எஸ்பெஷல்லி என போனில் பேசிக் கொண்டிருக்கும் அதா மாணவியை பெயரை சொல்லி உனக்கு கொஞ்சம் இது இருக்கு. அதாவது.. நீ அந்தமாதிரி நடந்துக்கிட்டாத்தான்.. மார்க் விஷயத்துல மட்டுமில்ல.. ஃபினான்சியலாவும் நல்ல சப்போர்ட் இருக்கும் என ஓப்பனாகவே பேசத்தொடங்குகிறார் பேராசிரியை, நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு இருக்கும். இன்னும் கொஞ்சம் பேசணும்.. அகடமிக் சைடுலயும் நல்ல சப்போர்ட் இருக்கும். பட், நீங்க வந்து இத நாலு பேருக்குத் தெரியாத அளவுக்கு.. இதை வந்து உங்க அப்பா, அம்மாவுக்கு சொல்லிட்டு செய்வீங்களா? சொல்லாம செய்வீங்களாங்கிறது.

தொடர்ந்து விடாமல் பேசிய அந்த பேராசிரியை, எனக்கு க்வெஸ்டின் மார்க். இதைச் சொன்னீங்கன்னா.. அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணி.. பட் அமவுன்ட் வந்து.. வர்றத அக்கவுண்ட் நம்பர் ஓபன் பண்ணி.. உங்களுக்கு அதுல போட்டு விடறேன். சப்போஸ்.. இப்ப தேர்ட் இயர் முடிச்சிட்டு.. உங்க பிளான் என்ன வச்சிருக்கீங்கங்கிற க்வெஸ்டின் மார்க்கை நான் ரெய்ஸ் பண்ணல. ஆனா.. நான் என்ன உங்கள யோசிச்சு வச்சிருக்கேன்னு சொன்னால்.. நாலு பேரோ, அஞ்சு பேரோ, சரியா?

இப்ப நான் எம்.கே.யுனிவர்சிடிக்கு வர்றதுனால, ஏற்கனவே, அந்த பாய்ண்ட் ஆஃப் வியூல போய்க்கிட்டிருக்கு.அந்த ஸ்டெப் எடுத்திருக்கேன் நான். என்ன ஸ்டெப் எடுத்திருக்கேன்னா.. டிஸ்டன்ட் எஜுகேசன் அப்படின்னு சொல்லுற செமினார்ஸ் வரும். ஈவினிங் காலேஜஸ் இருக்கு. அப்ப அந்த ஈவினிங் காலேஜஸ் இருக்கிறப்ப.. நான் வந்து அதுல இன்டர்ஃபியர் ஆகப்போறேன்.. அதுல ஆனேன்னா நோட்ஸ் ப்ரிபரேஷன்னு ஒண்ணு வரும்.. யுஜி.. பிஜி. ரெண்டுக்குமே..”

குறுக்கிட்ட மாணவி மேம் வந்து.. எங்களுக்கு, என சொல்ல இரு.. நான் ஃபுல்லா சொல்லி முடிச்சிக்கிறேன். அப்புறம் நீங்க திங்க் பண்ணி எனக்கு கன்க்லூஷன் கொடுத்தா போதும். உங்க வீட்ல வந்து, அதுக்கடுத்து.. ஃபர்தரா.. ரெகுலரா.. ரெகுலர் கிளாஸ்ல போயி படிக்கணும்கிற அவசியமே உனக்கு கிடையாது. உனக்கு வந்து.. நான் பேக் போன் மாதிரி. ஸ்பைனல் கார்ட் இஸ் வெரி இம்பார்டண்ட் இல்லியா? அதுமாதிரி.. எம்.கே. யுனிவர்சிடி. நீங்க இந்த ஸ்கீமுக்குள்ள வர்றீங்கன்னா.. உங்களுடைய பேக் போனா எம்.கே. யுனிவர்சிடி இருக்கும்.. இப்ப எல்லா லெவல்லயுமே உங்களுடைய மார்க்..

இப்ப வந்து உங்களோட க்ளாஸ்ல.. 85 பெர்சன்டுக்கு மேலே இருந்தால்.. அந்த கிரடிட் வருதுங்கிற அளவுக்கு நான் சொல்லி வச்சிருந்தேன். ஈச் அன்ட் எவ்ரிதிங்.. மார்க்வைஸாவும் சரி.. எல்லா இதுலயும்.. அப்டு டிகிரி வாங்குறது வரைக்கும்.. மந்த்லி மந்த்லி யுனிவர்சிடியில இருந்தே ஃபெலோஷிப் வாங்கி.. அதுவரைக்கும் உங்களைக் கொண்டுபோக முடியும். ஏன்னா.. நம்ம யுனிவர்சிடிய எப்படியெல்லாம் நாம யுடிலைஸ் பண்ண முடியுமோ.. அந்த அளவுக்கு யுடிலைஸ் பண்ண முடியும்.. பி.ஜி.க்கு ரெகுலர் கிளாஸ் தேவையே இல்ல. மந்த்லி மந்த்லி சேலரி கொடுக்கிற மாதிரி உங்க வீட்டுக்கு அமவுண்ட் வரும் என சொல்ல,

அதற்கு அந்த மாணவி  இல்ல மேம்.. இது எங்களுக்கு செட் ஆகாது மேம்.. இஷ்டம் இல்ல மேம் என சொல்கிறார்கள்.

யாரு இது? (பெயர்)  வா? ஏய்.. அடுத்து நீங்க என்ன பண்ணப் போறீங்கடா கண்ணா என விடாமல் கேட்கிறது இந்த மூதேவி ( நிர்மலா ஸ்ரீதேவி) கேட்க

Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution

அதற்கு மாணவிகள், அடுத்து நாங்க கவர்மெண்ட் எக்ஸாம் படிப்போம்.. அப்படி இல்லைன்னா M.SC பண்ணுறதா இல்ல மேம், சொல்கிறார்கள்.

தொடர்ந்து பிரைன் வாஷ் செய்துவரும் இந்த புரோக்கர் நிர்மலா  நீ பேங்க் எக்ஸாம் பண்ணுறதா இருந்தாலும் பண்ணிக்கோ. நீ கோச்சிங் சென்டர்ல போயி படிக்கிறதா இருந்தாலும் ஓ.கே.தான். புரியுதா? பேங்க் எக்ஸாம்.. டி.என்.பி.எஸ்.சி. கோச்சிங் எக்ஸாம்.. இப்ப வந்து நான் ஒரு ஆப்ஷன் சொல்லுறேன்னா.. இப்ப நீங்க வந்து சின்னக் குழந்தைங்கடா.. கண்ணுங்களா.. இப்ப ஒரு வி.சி. போஸ்ட் வருதுன்னு வச்சிக்க. வி.சி. போஸ்ட்டுக்கு பொலிடிகல் இன்ஃப்ளூயன்ஸ் இல்லாம வராது. இன்னும் நிறைய விஷயங்களை என்னால சொல்ல முடியல. என்னால இப்போதைக்கு டீடெய்லா சொல்ல முடியாது.  

இப்ப  இவ்வளவுதான் ஹின்ட் கொடுக்க முடியுது. பொலிடிகல் இன்ஃப்ளூயன்ஸோடதான் வி.சி.யே வர்றாங்க. இந்த TNPSC, Group  இந்த லொட்டு லொசுக்கு சமாச்சாரம் கூட, கவனிக்க முடியும். ஏன்னா TNPSC group வேல்யூசனுக்கு என்னைக் கூப்பிட்டாங்க ஒரு தரம். நான் எங்கேயிருக்கேன்? நான் அருப்புக்கோட்டையில இருக்கேன்.. ஆனா.. என்னைக் கூப்பிட்டாங்க ஒரு தரம். நீங்க அப்ளை பண்ணுங்க. நான் உங்களுக்கு ஆர்டர் கொடுக்க வைக்கிறேன்னு சொன்னாங்க. இந்த கவர்மெண்ட் பேசிஸ்ல வரக்கூடியதைக் கூட நம்மால ஓவர்கம்ல வர முடியும். ஓவர்கம் பண்ணி வரமுடியும்.

நீங்க கோ த்ரு பண்ணுங்க என்ன பண்ணனும்னு யோசிங்க. நான் உங்ககிட்ட நெக்ஸ்ட் வீக் தான் பேசப்போறேன்னு சொல்லிருக்கேன். நீங்க இன்னும் கொஞ்சம் டீடெய்லா பேசுங்க.  நீங்க ரொம்ப வெவரமான குழந்தைங்கடா என பேராசிரியை படுக்கைக்கு அழைப்பதை  உணர்ந்த இந்த மாணவிகள் மேடம் இதைப் பத்தி இதுக்கு மேல பேச வேண்டாம் என்று அப்போதே சொல்ல

 அதற்க்கு இந்த தரகர் நிர்மலா, வேண்டாம்னு சொல்லுறீங்களா? சரிடா கண்ணா.. ஒரு ஆபர்சூனிடி வந்தது.. அதான் சொல்லுறேன் கண்ணா.. இதை வந்து வெளில சொல்லிக்க வேணாம் என சொல்கிறார்.

இதற்கு மாணவிகள் சரிங்க மேம் சொல்லல சரி அதோடு பேசாமல் துண்டித்திருந்தால் பரவாயில்லை, மாணவிகள் இப்படி vendam எண்டு மறுத்தபோதிலும்,  இதுல ஏன் உங்கள இன்டிவிஜுவலா காண்டாக்ட் பண்ணுறத விட, எல்லாரையும் சேர்ந்து இதுல நான் உங்கள இது பண்ணுனேன்னா.. உங்க ஃபேமிலிக்குள்ளயும் ஒருத்தங்க ஒருத்தங்க ஒண்ணொண்ணு சொன்னா.. இது வித்தியாசம் வரும்; தெரியும். அதனாலதான்.. இப்படி ட்ரை பண்ணுனேன். அதனால இன்னைக்கு வியாழக் கிழமை இல்லியா? வர்ற வெள்ளி,  சனி இன்னும் ரெண்டு நாள் கூட யோசிங்க. இன்னும் கொஞ்சம் யோசிங்க. வர்ற சன்டே.. நான் காரணம் இல்லாம படுக்கைக்கு தள்ள அவகாசம் கொடுத்தது இந்த புரோக்கர் நிர்மலா.

ஆனால் அந்த நான்கு மாணவிகளும் இடைமறித்து, “பேசாதீங்க.. பேசாதீங்க..” என்று கெஞ்சுகிறார்கள்.

இப்படி அந்த மாணவிகள் கெஞ்சியும், இருங்கடா.. இருங்கடா.. இந்த ஆபர்சூனிட்டி அவ்வளவு ஈஸியா வராது. அதனால.. இன்னும் கொஞ்சம் யோசிங்க. நான் உங்கள ஒண்ணும் சொல்லல.  நான் எப்படி உங்ககிட்ட ஓபனா சொல்லுறேனோ.. அதுமாதிரி நீங்களும் ஒபனா சொல்லலாம். அதை நீங்க தெளிவாவே சொல்லலாம். இதுக்காக உங்க மார்க்ல எல்லாம் கை வைப்பேன்னு நினைக்காதீங்க. அப்படி செய்யவே மாட்டேன். ஆபர்சூனிடி வந்தது.. இதையே நான் ரொம்ப நாளா..

நானும் இதை யோசிச்சு.. கேட்கலாமா? வேணாமா? அந்த எண்ணத்துலதான்.. ரொம்ப டைலமாலதான் கேட்டேன். இப்ப நெக்ஸ்ட் வீக் அவங்களுக்கு வந்து ஒரு இம்பார்டன்ட் அசைன்மெண்ட் இருக்கும் . ஸோ.. அதுக்காக.. அர்ஜ் பண்ணுறாங்க.. வேணும்னு. அதுலதான் இப்ப அந்த ரிக்யர்மெண்ட ஸ்டார்ட் பண்ணுனேன்.  இல்லைன்னா.. நீங்க தேர்ட் இயர் முடிக்கிற வரைக்கும் நான் ஓபன் பண்ணுறதாவே இல்ல. நீங்க தேர்ட் இயர் முடிக்கிறவரைக்கும் நல்லபடியா இந்த B,Sc முடிச்சிட்டுப் போகணும்கிறதுதான் என்னுடைய எண்ணம் என கொஞ்சம் மிரட்டல் கலந்து பேசுகிறார் பேராசிரியை.

அதுமட்டுமல்ல, தொடர்ந்து பேசிய தரகர் நிர்மலா தேவி நெக்ஸ்ட் வீக்.. ஆனா..இங்கே வந்ததுக்கு அப்புறம்.. நெக்ஸ் வீக் ஒரு பெரிய அசைன்மெண்ட் இருக்கும் போல. நெறய விஷயங்கள்.. அவங்க.. என்னைய செக் பண்ணிட்டு.. அதுக்கப்புறம் சொன்ன விஷயங்கள்தான் இவ்வளவும். புரியுதா? என்னையவே நெறய  டெஸ்ட் பண்ணிட்டாங்க கூச்சமே இல்லாமல் தன் மகள் வயது இருக்கும்  பெண்களிடம் இப்படி காம நெடி வீச பேசியது இந்த புரோக்கர்.

அதோடு விடவில்லை, என்னை செக் பண்ணிட்டுத்தான் இந்த விஷயங்களை சொல்லுறாங்க கேவலமாக தொடர்ந்தது.  ரொம்ப ரொம்ப ஹையர் அஃபிசியல். அதைத்தான் நான் சொல்ல வர்றேன். எதுன்னாலும் சாதிக்க முடியும்னு. இந்த ஆபர்சூனிட்டி இருக்கிறதுனாலதான்.. நான் வந்து இதை சஜஸ்ட் பண்ணுறேன். அதையும் நான் சொல்லிடறேன். யாருங்கிறத மட்டும் நான் சொல்ல மாட்டேன். ரொம்ப ரொம்ப ஹையர் அஃபிசியல்ங்கிறது இதுல அடக்கம். அந்த அளவுக்கு ஈச் அண்ட் எவ்ரி ப்ரோக்ராம்லயும்.. உங்களுக்குத் தெரியுமா? தெரியாதான்னு எனக்குத் தெரியல.

Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution

என்னைய இன்டிவிஜுவல் பண்ணி ஸ்பெஷலைசேஷன் பண்ணிருந்தாங்க.. இதுவரைக்கும் சில விஷயங்கள்ல. ஈவன் ஸோ மெனி டைம்ஸ்.. 110 பேரு பண்ணிக்கிட்டிருக்கோம் அங்கே.. 110 பேரு நான் அட்டென்ட் பண்ணுறப்ப.. இதே மாதிரி 400 பேர் பண்ணுறாங்க. 400 பேர்ல.. ஒன் ஆப் தன்னு என்னை எக்சிகியூடிவ் பண்ணி ட்ரீட் பண்ணுறாங்க. ப்யூர் அப்சர்வேசன்ல தான் நான் உங்கள.. ப்யூர் அப்சர்வேஷன்ல நான் அவங்ககிட்ட கன்வே பண்ணினேன். அவங்களும் அக்செப்ட் பண்ணாங்க. பட் அதுக்கு அடுத்து வந்தவர்.. உங்களுக்கு கவர்னர் வர்ற வீடியோவெல்லாம் அனுப்பிச்சிருந்தேன்ல. சில விஷயங்கள் இன்னும் நடந்துச்சு. அது நீங்க என்ன சொன்னீங்க.. அது நடுவுல ஒரு ஸ்க்ரீன் இல்லாம.. கவர்னர் லெவல்..

கவர்னர் தாத்தா இல்ல. நான் சொல்ல வர்ற ரீசன் வந்து.. அந்த கவர்னர் மீட்டிங் வீடியோவுல நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்.. ஸோ.. அந்த அளவுக்கு என்னால மூவ் பண்ண முடியும்.  எனக்கு அலவன்ஸ் இருக்கு. கொஞ்சம் லிபரலைசேஷன் இருக்கு. அது இலைமறை காயா வெளிய நாலு பேருக்கு பளிச்சுன்னு தெரியாத அளவுக்கு இருக்கு. அவரு யாருன்னு இப்ப உங்ககிட்ட சொல்லிட்டேன்னா.. நீங்க கொஞ்சம் வேகமா எனக்கு அஷ்யூரன்ஸ் கொடுக்கிறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. இந்த ஹின்ட் மட்டும்தான் கொடுப்பேன். ஏன்னா.. அந்த அளவுக்கு சீக்ரஸி.. பிரைவஸி. அந்த இதை அவங்க மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்காங்க இப்ப.. செவன்த் டே இன்னிக்கு.. அப்புறம் எந்த அளவுக்கு என்னைக் கொண்டு போறாங்க..

டெஸ்ட் வைக்கிறாங்கன்னு பார்த்ததுக்கு அப்புறம்தான்.. அந்த அர்ஜன்ஸில இப்ப நான் ஓபன் பண்ணுறேன். எனக்கு பேப்பர் வேல்யூசனுக்கு முன்னாடி இருந்து.. இங்கே ரெண்டு மூணு இம்பார்டன்ட் பெர்சன்ஸுக்கு தெரியும். அவங்களும் ரிக்யர்மெண்ட் வச்சிருந்தாங்க. ஈவன் இந்த காம்பெடிசன் சிச்சுவேசன்லயும்.. கல்சுரல் ஈவன்ட்ஸுலயும்.. நம்ம மட்டும் தனியா இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எவ்வளவோ இருந்துச்சு.  அப்பக்கூட, நான் ஓபன் பண்ணல. ஏன்னா நான் உங்களுக்கு டிகிரி வாங்கிக் கொடுக்கிறதுல ரொம்ப ரொம்ப கவனமா இருந்தேன். ஏன்னா அந்த அளவுக்கு ப்ராப்ளம் இருந்தது அந்த சந்தர்ப்பத்துல. நாம காம்படிஷனுக்கு வர்ற சமயத்துலயும் கூட..

 நாம காம்பெடிசன் வர்ற சமயத்துல கூட, காலேஜ் டே சமயத்துல கூட, நிலைமை காலேஜ்லயே மாறிட்டு வந்திருச்சு. இப்ப நான் இங்கே இருக்கேன்.. இருந்தாலுமே.. என்னால சர்வைவ் பண்ண முடியும். அங்கே வந்து நிலைமையை மாத்த முடியும். அப்படிங்கிற 95 பெர்சன்டேஜ் நம்பிக்கையிருக்கு. நான் இங்கேதான் இருக்கேன். அங்கே என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. ஆனாலும் நம்பிக்கை இருக்கு. 95 பெர்சன்ட் மாத்த முடியும்னு. இதுக்காக நான் யாரையுமே பனிஷ்மெண்ட் பண்ணப்போறது இல்ல. ஈவன் எவ்வளவோ பிரச்சனைகள். அரவிந்த் சாரே கொடுத்திருக்காரு.

பட் யாரையும் பனிஷ்மெண்ட் பண்ணுறது  கிடையாது. நான் அடுத்த லெவலுக்குப் போகப்போறேன். கூட உங்கள கைத்துணைக்கு கூப்பிடறேன் அவ்வளவுதான். உங்களை கைதூக்கி விடறதுக்கு கூப்பிடறேன். இஃப் யு ஆல் ஆர் வில்லிங்.. தென் திங் பண்ணுங்க. சன்டே வரைக்கும்.. அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்டா கண்ணா.. என படிப்பைக் கூட இப்படி சொல்லிக் கொடுக்காத நிர்மலா தேவி.  எப்படி ஒரு காம்பெடிஷன்ல உங்களை கைடு பண்ணி அடுத்த ஸ்டெப்புக்கு கொண்டுபோவேனோ.. அதைவிட இது கொஞ்சம் முக்கியமானது. இந்தக்காலத்துல இப்ப நான் பேச வர்ற விஷயம்.. ரொம்ப ரொம்ப ஆர்டினரி விஷயங்கள்.. அப்படிங்கிறது உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. உலகத்துக்கே தெரியும்.. அதை ரொம்ப ரொம்ப பாஸிடிவா சொன்னது.

இவரின் பேச்சிக்கு மசியாத மாணவிகள், இல்ல மேம்.. எங்களுக்கு இன்டரஸ்ட் இல்ல மேம், என ஓபனாகவே சொல்கிறார்கள். இதற்கும் என்னடா.. ரொம்ப ரொம்ப பாஸிடிவா ஹேன்டில் பண்ணப் போறோம்.. அவ்வளவுதான் என சொல்ல மாணவிகள், இல்ல மேம்.. வேணாம் மேம்..

இப்ப வேணாம்னு சொல்லுறீங்கள்ல.. ஐ வில் வெய்ட் ஃபார் யூ.. நல்லா திங்க் பண்ணுங்க. அவசரப்பட்டு.. யாருடைய இன்ஃபுளூயன்ஸும் இல்லாம நீங்களா இன்டிவிஜுவலா திங் பண்ணுங்க. சாடர்டே  நான் கால் பண்ணுறேன். என சொல்ல அதற்கு மாணவிகளோ இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேணாம்..மேம்.. விட்ருங்க மேம், இஷ்டம் இல்லையாடா.. கண்ணா.. பட் எனக்கு வந்து அஷ்யூரன்ஸ் வேணும்.. இந்த விஷயம் வெளியே போகக்கூடாது..”

Nirmala Devi Audio Professor Calls Students for Prostitution

நாங்க யாருகிட்டயும் சொல்ல மாட்டோம் மேம் என சொல்ல அதற்கு

பேராசிரியை ஐ வில் பிலீவ் யூ.. ஐ பிலிவ் யூ ஆல்.. ஓகே. நீங்க வேணாம்னு சொல்லியிருந்தாலும்.. எனக்கு 75 பெர்சன்டேஜ் நம்பிக்கை இருக்கு.. இன்னும் 25 பெர்சன்டேஜ் உங்ககிட்ட தான் இருக்கு.. சாடர்டே சிக்ஸ் ஓ கிளாக் வரைக்கும் வெயிட் பண்றேன் டா என முடியும் இந்த ஆடியோ வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதையடுத்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கல்லூரி முன்பு மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து கல்லூரி செயலாளர் மற்றும் கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் நிர்மலா மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட டிஎஸ்பி தனபால், சட்டரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.  பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை காவ்யா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் சென்று சுமார் மூன்று மணிநேரம் அவரது வீட்டியோ தட்டியும் வராததால் போலீசார் காத்திருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios