தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், என்றும் நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

தமிழகத்தில்   வடகிழக்கு பருவமழையின் காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.   ஆனாலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது , அன்றுமுதல்  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வந்தது.  கடந்த மாதம் சென்னையில் வலுபெற்ற பருவமழை கன மழையாக வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மழை ஒய்ந்து  சில நாட்களாக வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது . பின்னர் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது,  இந்நிலையில்   இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் , 

வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் இருந்து கர்நாடகா வரை நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் புரிளியாறு 4 செ.மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் 3செ.மீட்டர் மழை பதிவு. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், என்றும் நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும்,   குறைந்தபட்ச வெப்பநிலையாக 23டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...