பிப் 10 ஆம் தேதி புதிய மெட்ரோ சேவை.. சென்னையில்..! எங்கிருந்து எது  வரை தெரியுமா..? திறந்து வைக்கிறார் மோடி..! 

பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போது பிரச்சார உரையை தொடங்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், மக்களுக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பற்றி மக்களிடம் சென்றடைய பிரச்சார உரை ஒரு பக்கம் சூடு பிடித்தாலும் இன்னொரு பக்கம், எப்படியாவது பாஜக வை வீழ்த்தியே ஆக வேண்டும் என காங்கிரஸ் மும்முரம் கட்டி வருகிறது. அதற்காக பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தாலும், பிரதமர் மோடி எதை பற்றியும் கவலை கொள்ளாமல், ஒவ்வொரு நல்ல திட்டத்திற்கும் அடிக்கல் நாடி வருகிறார்.

அந்த வகையில் இம்மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சார உரையை நிகழ்த்த வருகை தரும் மோடி, வரும் 10 ஆம் தேதி 
கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை யை தொடங்கி  வைக்க உள்ளார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பிரதமர் மோடி, வரும் 10ம் தேதி, திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலமாக, துவக்கி வைக்க உள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது..? என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைக்கிறார் மோடி.