Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது! ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

நீட் தேர்வு விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அதன் சமத்துவமின்மையை எடுத்துகாட்டுகின்றன. சமுதாயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

NEET exam is against the poor.. CM Stalin tvk
Author
First Published Jun 16, 2024, 1:40 PM IST | Last Updated Jun 16, 2024, 1:40 PM IST

குஜராத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 5 பேர் கைதாகியுள்ளதை சுட்டிக்காட்டி சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நீட் தேர்வு விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அதன் சமத்துவமின்மையை எடுத்துகாட்டுகின்றன. சமுதாயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது.

இதையும் படிங்க: 2026ல் ஆட்சியை பிடிப்போம் சொல்லிக்கலாமே தவிர அதெல்லாம் நடக்கற காரியம் இல்லை! அதிமுகவை போட்டு தாக்கும் திமுக!

தேசிய தேர்வு முகமைக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேசியுள்ள போதிலும் சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமாக உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைககளை பெற்றுக்கொண்டு ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி நீட் தேர்வு விவகாரத்தில் முறையான மாற்றத்துக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதையும் படிங்க:  தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை... பொறுத்திருந்து பாருங்க...: மு.க.ஸ்டாலின் சூளுரை

அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடி என்பது மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது. மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 5 பேர் கைதாகியுள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios