Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் PFI நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை- காரணம் என்ன..?

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில்  தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

National Investigation Agency raids homes of PFI executives
Author
First Published Sep 22, 2022, 7:58 AM IST

தேசிய புலனாய்வு சோதனை

பாப்புலர் ப்ரண்ட ஆப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி பல்வேறு பயிற்சிகளை அளித்துவருவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில்  தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.அதன்படி மதுரையில் நெல்பேட்டை  பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்  யூசுப் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.  

அசால்ட்டாக பீர் குடித்த 8 வயது சிறுவன்.. வைரல் வீடியோவால் சிக்கிய உறவினர்.. இதுதான் காரணமா?

National Investigation Agency raids homes of PFI executives

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இந்தநிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர. மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.இதேபோன்று மதுரை மாநகர் பகுதியில் வில்லாபுரம், கோமதிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.சோதனை நடைபெறுவதையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

National Investigation Agency raids homes of PFI executives

கோவையில் சோதனை

கோவை கரும்புக்கடை பகுதியில் PFI தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனைநடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் கடந்த 13 ம் தேதி வருமான வரித்துறை, அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனை நடத்தப்பட்டதா என  சோதனை நடத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இதையும் படியுங்கள்

அரசு பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட 140 மதுபான பெட்டிகள் - தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !

 

Follow Us:
Download App:
  • android
  • ios