Asianet News TamilAsianet News Tamil

போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Narcotic drugs should not be given without a doctors prescription tn govt announcement
Author
First Published Oct 19, 2022, 8:41 PM IST

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், தனது நோயாளிகளுக்கு மிகவும் அவசியம் என தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, வலி நிவாரண மருந்துகளை பரிந்துரைக்கிறார். அப்படியில்லாமல், மருத்துவரின் முறையான அனுமதியின்றி கள்ளத்தனமாக போதை தரும் மருந்துகளை, குறிப்பாக வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை விற்றுவருகிறார்கள்.

வலி நிவாரண மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கு அதுவே ஒரு கட்டத்தில் போதையாக மாறும் ஆபத்து அதிகம் என்பதே மருத்துவர்கள் கொடுக்கும் தகவலாகும். இப்படிப்பட்ட மருந்துகள் தாராளமாக எளிதாக மக்களுக்கு எப்படி கிடைக்கிறது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.மருத்துவரின் முறையான பரிந்துரை இல்லாமல், மெடிக்கலில் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

Narcotic drugs should not be given without a doctors prescription tn govt announcement

இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

இந்நிலையில் தமிழக அரசு இதுதொடர்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமிழக மருந்துக்கட்டுப்பாடு இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் மருத்துவரின் உரிய பரிந்துரைச்சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும்.

இதையும் படிங்க..தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு

Narcotic drugs should not be given without a doctors prescription tn govt announcement

அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை/விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios