Asianet News TamilAsianet News Tamil

தென் மாவட்டங்களுக்கு இன்னொரு சிறப்பு ரயில்! தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Nagercoil Bengaluru special trains to clear Deepavali rush sgb
Author
First Published Nov 6, 2023, 11:35 PM IST

தீபாவளி பண்டிகையின் போது ரயில்களில் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மற்றொரு சிறப்பு ரயிலை இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்-பெங்களூரு-நாகர்கோவில் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06083) நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும். அதாவது இந்த ரயில் நவம்பர் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும். மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

தீபாவளிக்கு மறுநாளும் லீவுதான்... மகிழ்ச்சியா கொண்டாடுங்க: தமிழக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு

Nagercoil Bengaluru special trains to clear Deepavali rush sgb

பெங்களூரு-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில் (வண்டி எண் 06084) பெங்களூரில் இருந்து புதன்கிழமைகள் தோறும் மூன்று வாரங்கள் இயக்கப்படும். அதாவது, நவம்பர் 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும். அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

இந்த ரயிலில் 1 ஏசி 2-டையர் கோச், 3 ஏசி 3-டையர் கோச், 10 ஸ்லீப்பர்  இரண்டாம் வகுப்பு கோச், 2 ஜெனரல் கோச் இருக்கும். இவை தவிர 2 லக்கேஜ் பெட்டிகளும் இருக்கும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ‘ஏ’, பங்காரப்பேட்டை, கிருஷ்ணாஜபுரம், பெங்களூரு கண்டோன்மெண்ட் மற்றும் பெங்களூரு சிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.

காசா கிராண்ட் ஐடி ரெய்டு: கணக்கில் வராத ரூ.600 கோடி கண்டுபிடிப்பு; ரொக்கமாகச் சிக்கிய ரூ.4 கோடி!

Follow Us:
Download App:
  • android
  • ios