நடிகை விஜயலட்சுமியின் தற்கொலை மிரட்டல்... அலறி அடித்து காவல் நிலையம் ஓடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி
பணம் கேட்டு மிரட்டும் வகையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சீமான்- விஜயலட்சுமி பிரச்சனை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது தற்கொலைக்கு சீமான் தான் காரணம் எனவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியில் தலைமை நிலைய செயலாளர் செந்தில் குமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தற்போது பெங்களூர் நகரில் வசித்து வரும் முன்னாள் நடிகையான விஜயலட்சுமி என்பவர், எங்களின் கட்சித் தலைவர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண் உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டோடு புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டார்.
பணம் பறிக்க முயற்சி
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் கட்சி தலைவர் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலட்சுமி என்ற பெண்ணோடு இணைந்து கூட்டு சதியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியை தூண்டி விட்டும், அவருக்கு உதவிகள் செய்தும், சீமான் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மீண்டும் ஒரு புகாரை காவல் ஆணையரிடம் விஜயலட்சுமி கடந்த மாதம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு கடந்த ஒரு மாதமாக விஜயலட்சுமி செயல்பட்டு வந்ததாகவும், இந்த திட்டம் நிறைவேறாத காரணத்தால் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில்,
விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல்
சீமானை மிரட்டி பணம் பறிக்கும் வகையில் விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், நீர் மற்றும் உணவு அருந்தாமல் தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்கு சீமான் தான் காரணம் என விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
கர்நாடக மற்றும் தமிழ்நாட்டில் பலர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய விஜயலட்சுமி, ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாக சீமானையும், நாம் தமிழர் கட்சியனரையும் விஜயலட்சுமி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். எனவே விஜயலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம்... நான் தந்த யோசனை- கமல்ஹாசன்