Asianet News TamilAsianet News Tamil

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம்... நான் தந்த யோசனை- கமல்ஹாசன்

நாட்டிற்கு யார் அவசிய தேவை என்கிற கேள்விக்கு காந்தியே திரும்பி வருவது என்பது முடியாது. ஆனால் காந்தியை போன்ற நபர் வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 

Kamal Haasan appreciated the magalir urimai thogai scheme implemented by the Tamil Nadu government KAK
Author
First Published Sep 24, 2023, 8:00 AM IST

மணிப்பூர் மாணவர்களுக்கு தமிழகத்தில் படிப்பு

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்றநிகழ்ச்சியில் , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  அப்போது மாணவர்கள் மத்தியில் பேசுகையில்,  லயோலா கல்லூரியில் இருந்து  நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு வந்தால் மற்ற சில வேலைகளை ஒத்திவைத்து வருவது எனக்கு பிடிக்கும். பள்ளி செல்லாதவற்களை கல்லூரியில் சேர்க்க மாட்டார்கள். இதனால் கல்லூரி செல்வது போல் கல்லூரி செல்பவர்களை வழி அனுப்ப வருவேன்.

திரைப்படங்களில் நடிப்பதற்காக லயோலா கல்லூரி வருவேன். இங்கு தான் படப்பிடிப்பு நடைபெறும். மணிப்பூரில் இருந்து வந்த மாணவர்களுக்கு லயோலா கல்லூரியில் இடம் கொடுத்ததற்கு எனது பாராட்டுகள். மணிப்பூரில் இனி படிப்பும் நடக்காது, விளையாட்டும் நடக்காது, கலையும் இருக்காது.

Kamal Haasan appreciated the magalir urimai thogai scheme implemented by the Tamil Nadu government KAK

வாக்காளர் அடையாள அட்டை

மணிப்பூரில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என இந்த மேடையில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். மாணவர்கள் நீங்கள் எல்லாம் படிப்பது வேலைக்காக தான். ஆனால் வேலை இருக்கணுமே,  நீங்கள் ஓட்டு போடும் வயதிற்கு வந்துவிடீர்கள். எத்தனை பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளீர்கள்.

அதை கண்டிப்பாக வாங்க வேண்டும். கையில் புள்ளி வைப்பதற்கு முன் நாளை யாரை ஆள வைக்க போகிறீர்கள் என்கிற கவலை வேண்டும். ஒட்டு போட்டால் எல்லாம் சரியாகி விடுமோ என்று எதையும் கூறமுடியாது. நாட்டை ஜனநாயக நாடாக மாற்ற வேண்டியது நம் கடமை. கட்டை விரலில் நோய் வந்தால் தலையே விழுந்துவிடும். கைகளை கட்டிக் கொண்டு கிராமத்திலிருக்கும் அரசியல் பேசும் பெரியவர்களை பார்த்து முறைத்தாலே போதும்.

Kamal Haasan appreciated the magalir urimai thogai scheme implemented by the Tamil Nadu government KAK

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

நாட்டிற்கு யார் அவசிய தேவை என்கிற கேள்விக்கு காந்தியே திரும்பி வருவது என்பது முடியாது. ஆனால் காந்தியை போன்ற நபர் வேண்டும். வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியம் என்கிற கேள்விக்கு சோறு, தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது. அதை வாங்க பணம் ஒரு கருவி தான். பணம் பேசா மடந்தை என தெரிவித்தார். தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வரும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நான் தந்த யோசனை என தெரிவித்த அவர், எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக்கொண்டாலும் பொறாமைப்படாமல் பாரட்டுவதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

கலையுலகம் கண்டுகொள்ளாத ஏக்கம்.. நானும் தற்கொலை பற்றி யோசித்திருக்கிறேன் - மாணவர்களுடன் உரையாடிய கமல்ஹாசன்!

Follow Us:
Download App:
  • android
  • ios