ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்கும் இளையராஜா.. டெல்லியில் பாஜக உற்சாக வரவேற்பு
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்காக நேற்று டெல்லி சென்ற இளையராஜவை பாஜகவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இசை மேதைக்கு மரியாதை
தமிழக இசை ரசிகர்களை மட்டுமில்லாமல் இசை ரசிகர்கர்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அவர்களை அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா, காரில் தனிமைப்பயணம், இரவு நேர அமைதி, மழைக்காலம் என எந்த ஒரு நிகழ்வுகளிலும் நம்மோடு பயணிப்பது இளையராஜாவின் இசையாகும். அந்த இளையராஜாவை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டாலும், அவரது இசையை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் மாநிலங்களவை நியமன எம்.பியாக இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை இளையராஜாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மோடி கொடுத்த பரிசு
அதே நேரத்தில் மோடியை, அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டு பேசியதற்க்கு கிடைத்த பரிசு என ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பாஜகவோ இசை மேதைக்கு செய்யப்படுகின்ற மரியாதையை ஏன் இப்படி கொச்சைப்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தநிலையில் மாநிலங்களவையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நியமன எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது இளையராஜாவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. துணை குடியரசு தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு, இளையராஜாவின் பெயரை கூறி பதவியேற்க அழைப்பு விடுத்தார். ஆனால் இளையராஜா பதவியேற்க வரவில்லையென கூறப்பட்டது. முதல் நாளிலேயே இளையராஜா ஆப்சென்ட் என நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்தநிலையில் இளையராஜா அமெரிக்கா சென்ற காரணத்தில் பதவியேற்க முடியவில்லையென கூறப்பட்டது.
புதிதாக 14 பேரை அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் இபிஎஸ்
இன்று பதவியேற்கும் இளையராஜா
இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர், நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அவரை பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்று சென்றனர். இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள மாநிலங்களவை கூட்டத்தின் போது இளையராஜா நியமன எம்பியாக பதவியேற்கவுள்ளார்.