கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை... தாயும் குழந்தையும் உயிரிழப்பு... திண்டிவனத்தில் நிகழ்ந்த சோகம்!!
திண்டிவனம் அருகே தவறான சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி பெண்ணும் அவரது குழந்தையும் உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே தவறான சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி பெண்ணும் அவரது குழந்தையும் உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த ஏந்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் இவருக்கு சந்திய என்ற மனைவியும் 2 மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான சந்தியா, பிரசவத்திற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த மருத்துவர்கள், சௌந்தர்ராஜனிடம் பூர்த்தி செய்யாத விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றுவிட்டு வெளியே வந்த குழந்தையின் தலையை உள்ளே தள்ளி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் அறிவியுங்கள்… தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
அப்போது குழந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இறந்த குழந்தை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 6 ஆம் தேதி முதல், 9 ஆம் தேதி வரை சிகிச்சையில் இருந்த சந்தியாவிற்கு மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் மாத்திரை போடும்படியும் கூறியுள்ளனர். ஆனால் சந்தியாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த 11 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில், சந்தியாவிற்க்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு செப்டிக் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி.. நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்கள் ? முழு விபரம்
ஆனால் சிகிச்சை பலனின்றி 13ஆம் தேதி அன்று மதியம் இதயத்துடிப்பு குறைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தவறான சிகிச்சை அளித்ததால் தான் சந்தியா இறந்து விட்டதாகவும், இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அன்று மருத்துவரின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும் தவறான அறுவை சிகிச்சை செய்ததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்ததாக கூறி சந்தியாவின் உறவினர்கள் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தவறான அறுவை சிகிச்சையால் தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.