கனமழை எதிரொலி.. நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்கள் ? முழு விபரம்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.

Mayiladuthurai schools and colleges Holidays for tomorrow District Collector announcement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் வங்கக் கடலில் வடக்கு இலங்கை பகுதிக்கு அருகே நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Mayiladuthurai schools and colleges Holidays for tomorrow District Collector announcement

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரள -  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Mayiladuthurai schools and colleges Holidays for tomorrow District Collector announcement

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மயிலாடுதுறை பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை (14.11.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவத்த ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க..கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !

இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios