ஒரே ஆண்டில் 9,50,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!
கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவுறுத்தினார். அதன்படி ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதன்படி மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு பணி நியமன ஆணைகளை மோடி வழங்கி வருகிறார்.
அந்த வகையில் நாடு முழுவதும் நடந்து வரும் ‘ரோஸ்கர் மேளா’வின் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமான வரித்துறை, தபால் நிலையம், கேந்திர வித்யாலயா ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 42 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மத்திய இணையமைச்சர் எல். முருகன் 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறை, வருமான வரித்துறை, தபால் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் பணி நியமன ஆணை பெற்ற இளைஞர்களின் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை காணொளி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முன்னதாக, இவ்விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல் முருகன் " இன்று பணி ஆணை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் கொடி ஏற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, அடுத்த ஓராண்டிற்குள் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
அதை நிறைவேற்றும் வகையில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை, விரைவில் 10 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல, முதலாளிகளாகவும் மாறலாம். இந்த ஸ்டார்ட்அப்களின் தலைமை நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களின் திறன்களை மேம்படுத்த திறன் இந்தியா திட்டம் செயல்படுகிறது.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் செயல்படுத்தப்படுகின்றன. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்களித்தன. குறிப்பாக, தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சந்திரயான் வெற்றிக்கு பங்களித்தன.
முன்பு பாதுகாப்பு பொருட்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடமாக அறிவிக்கப்பட்டு, ராணுவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
அதுபோல, தொழில் வளர்ச்சியிலும், தேசத்தின் வளர்ச்சியிலும் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், கதி சக்தி திட்டத்தின் கீழ் உள்நாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வெறும் 6 மணி நேரத்தில் பயணிக்க முடியும். வந்தே பாரத் ரயில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை சமீபத்தில் பிரதமர் ஏற்படுத்தினார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளுர் பொருட்களை பயன்படுத்தினால் தான் சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்.
இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டை வல்லரசாக மாற்ற மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வது இன்று பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர்கள் கையில் உள்ளது” என்று தெரிவித்தார்.
- modi rojgar mela
- pm modi rojgar mela
- pm modi rozgar mela
- pm modi rozgar mela 2022
- pm modi rozgar mela 2023
- pm modi to launch rozgar mela
- pm rojgar mela 2023
- pm rojgar mela 2023 next date
- pm rojgar mela 2023 official website
- pm rozgar mela 2023
- pm to launch rozgar mela
- rojgar mela
- rojgar mela 2023
- rojgar mela september 2023
- rozgar mela
- rozgar mela 2023
- rozgar mela live
- rozgar mela news
- up rojgar mela 2023
- what is rozgar mela