தற்காலிக ஆசிரியர் பணிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேர சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேர சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதையும் படிங்க: டெட் தேர்வை முடித்தவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி , 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.
அதன்படி ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த நிலையில் பலரும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வந்தனர். தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க நேற்று மாலை 5 மணி வரை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மக்கள் மத்தியில்
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.