டெட் தேர்வை முடித்தவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:கவனத்திற்கு!! தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்.. முழு விபரம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக சேர, அவர்களுக்கு டிசம்பரில் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதன் படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பரில் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 149 நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வு குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:அரசுப்பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 பணியிடங்களுக்கு தேர்வு.. வெளியான முக்கிய தகவல்..