அரசுப்பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 பணியிடங்களுக்கு தேர்வு.. வெளியான முக்கிய தகவல்..
தமிழகத்தில் அரசுப்பள்ளி, கல்லூரிகளில் காலியாக ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பானை செப்டம்பரில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர் மற்றும் பாலிடெக்னின் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 7 ஆம் தேதி இந்தாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
மேலும் படிக்க:தமிழ் தேர்வில் 47 ஆயிரம் பேர் தோல்வி..! பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்க முடிவா..? அதிர்ச்சியில் ராமதாஸ்
அதன்படி மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணபிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு தேதி, அனுமதி சீட்டு வழங்குவது குறித்த அறிவிப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில், தற்போதைக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையுள்ள காலக்கட்டத்தில் தாள் 1 க்கான தேர்வுகள் நடத்தப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:மாணவர்களே கவனத்திற்கு.. மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு
இதற்கிடையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கு வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறித்துள்ளது.