கவனத்திற்கு!! தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்.. முழு விபரம்

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் காலியாக உள்ள 13 ஆயிரம்  தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணி வரை தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரிப்பார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

Today is the last date to apply for temporary teacher post - School Education

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் காலியாக உள்ள 13 ஆயிரம்  தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணி வரை தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரிப்பார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வரையறுத்துள்ள கல்வித்தகுதிகள்‌ அடிப்படையில்‌ கடந்த ஜூன்‌ 1-ஆம்‌ தேதி வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும்‌ என்றும் இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களை மாவட்ட, வட்டாரக்‌ கல்வி அதிகாரிகளிடம்‌ ஜூலை 4-ஆம்‌ தேதி முதல்‌ இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டக்கல்வி அதிகாரிகள்‌ தொகுத்து பள்ளிகளின்‌ தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்‌ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அரசுப்பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 பணியிடங்களுக்கு தேர்வு.. வெளியான முக்கிய தகவல்..

அதன்படி, ”டெட் ” முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை இடைநிலை ஆசிரியர்‌ பணிக்கும் 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர்‌ பணிக்கு முதுநிலை பட்டயப்படிப்புடன்‌ பி.எட்‌., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. 

ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும்‌ மேற்பட்டோர்‌ விண்ணப்பித்தால்‌ டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றவர்களுக்கு  முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்‌ என்று வழிக்காட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர்‌ பணிக்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ நடத்திய தேர்வில்‌ பங்கேற்று சான்றிதழ்‌
சரிபார்ப்பில்‌ கலந்து கொண்டவர்கள்‌ அல்லது பள்ளி அருகே அமைந்துள்ளவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:LPG Gas Price: கலக்கத்தில் நடுத்தர மக்கள்.. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..எவ்வளவு தெரியுமா?

இதில்‌ தகுதிபெறும்‌ பட்டதாரிகளை வகுப்பறையில்‌ மாணவர்களுக்கு பாடம்‌ நடத்த வைத்து அவர்கள்‌ திறனறிந்து பின்னர்‌ பணி நியமனம்‌ செய்ய வேண்டும்‌. மேலும்‌, இந்தப்‌ பணியிடம்‌ தற்காலிகமானது. பணி மற்றும்‌ நடத்தையில்‌ திருப்தி இல்லையெனில்‌ உடனடியாக விடுவிக்கப்படுவர்‌ என பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி புகார்களுக்கு இடமளிக்காதவாறு பணிநியமனங்களை நடத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios