வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரள முதலமைச்சரிடம் மீட்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.  

வயநாடு நிலச்சரிவு

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகள், பாலம் ஆகியவலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளது. இந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிரமாக பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே கேரள முதலமைச்சரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலச்சரிவு மீட்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி.? நடந்தது என்ன.? 300 வீடுகள், பாலம் மாயம்- வெளியான ஷாக் தகவல்

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில், வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

Scroll to load tweet…

இழப்பீடு அறிவிப்பு

மேலும் மீட்பு பணிகள் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாக கூறியுள்ளார். இதனிடையே வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரழந்தவருகளுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதே போல காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் மிகவும் வேதனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

மீட்பு பணி- ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு

இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி மீட்புப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வயநாடு விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார் . மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்வதாக அந்த பதிவில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

Wayanad Landslide | தொடர் மழையால் வயநாட்டில் நிலச்சரிவு! 20 பேர் பலி