கிராம சபை கூட்டங்களைப் போல நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு நான்கு முறை ஏரியா சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டு தோறும் நான்கு முறை ஏரியா சபை (நகர சபை) கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது போல நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஜனவரி, ஏப்ரல், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தக் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதியும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியும், எரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியும், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் தேதியும் எரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Aavin vs Amul: தமிழகத்தில் நுழையும் அமுல்! ஆவின் பால் விற்பனைக்கு ஆபத்தா?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் 4 நாட்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதியும், உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதியும் சுதந்திர தினமான ஆகஸ்டு 15ஆம் தேதியும், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதியும் கிராமசபை கூட்டம் நடக்கிறது. கிராம பஞ்சாயத்து தலைவர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டங்களில் மக்களின் அன்றாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக ஏரியா சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும் வார்டு கவுன்சிலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தவிர தமிழகத்தின் பிற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்று முதல் ஏரியா சபை கூட்டம் நடந்தது.

சிங்கப்பூர் சென்ற மு.க. ஸ்டாலின்... சிறப்பான வரவேற்பு கொடுத்த இந்திய தூதர் குமரன் பெரியசாமி