Aavin vs Amul: தமிழகத்தில் நுழையும் அமுல்! ஆவின் பால் விற்பனைக்கு ஆபத்தா?
ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை கொள்முதல் விலை கொடுக்கிறது. ஆனால், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை தரத் தயாராக இருக்கிறது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமான ஆவின், பால் விற்பனையில் ஏகபோகத்துடன் செயல்பட்டு வருகிறது. குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்தில் விற்பனையைத் தொடங்க இருப்பது ஆவின் ஆதிக்கத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அமுல் நிறுவனம் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆலையை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அங்கு அனுப்பப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பால் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அமுல் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து சித்தூருக்கு 3,000 லிட்டர் பால் கொண்டு செல்லப்படுவதாகவும், சென்னைக்கு தினமும் 1.70 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுவதாகவும் அமுல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அமுல் 3,000 லிட்டர் கொள்முதலை 30,000 லிட்டராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவில் திருவிழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மேலும், மாநிலத்தின் முதன்மையான கொள்முதல் பகுதிகளான திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களையும் அமுல் நிறுவனம் விரைவில் அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ சிட்டியில் ஒரு ஆலையை அமுல் நிறுவுகிறது எனச் சொல்லப்படுகிறது.
ஆவின் நிறுனவம் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கு, கொழுப்பு அளவைப் பொருத்து, லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை கொள்முதல் விலையை வழங்குகிறது. அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை கொடுக்கத் தயாராக உள்ளது. அது மட்டுமின்றி கலெக்ஷன் ஏஜெண்டுகளுக்கு லிட்டருக்கு 50 பைசா வீதம் வழங்க உள்ளது.
ஒரு மாநிலத்தின் பால் கூட்டுறவு அமைப்பு மற்றொரு மாநிலத்தில் உள்ள அமைப்புகளை பாதிக்கும் வகையில் செயல்பட்டக் கூடாது என்று முதலில் கூறியது அமுல் நிறுவனம் தான் என்றாலும், இப்போது அந்த நிறுவனமே மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய முன்வருகிறது என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் திடீர் மாற்றம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு
ஆவின் தினசரி பால் கொள்முதல் ஒரு மாதத்திற்கு முன் 40 லட்சம் லிட்டராக இருந்தது. இது தற்போது நாளொன்றுக்கு 32 லட்சம் லிட்டராகக் குறைந்திருப்பதற்கு அமுல் வருகையே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழக பால் முகவர்கள் மற்றும் பணியாளர்கள் நல சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறுகையில், "உள்ளூர் அதிகாரிகள் தேசிய கூட்டுறவு விதிமுறைகளை மீறி, பால் வழங்கத் துவங்கியதால், ஆவின் நிறுவனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவை எதிர்கொள்ளவே ஆவின் இப்போது 'மேஜிக்' பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது" என்றார்.
மேலும், "இதற்கு கர்நாடகாவைப் போன்று தமிழ்நாட்டிலும் அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அமுல் வருகை நந்தினி பிராண்டை பாதிக்கும் என்ற சர்ச்சை எழுந்தது அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தது" என அவர் கூறினார்.
மக்களிடம் புழக்கம் இல்லாததால், வங்கிகளில் காத்துவாங்கிய ரூ.2000தாள் மாற்று கவுண்டர்!