சிங்கப்பூர் சென்ற மு.க. ஸ்டாலின்... சிறப்பான வரவேற்பு கொடுத்த இந்திய தூதர் குமரன் பெரியசாமி

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

MK Stalin welcomed in Singapore by Indian High commissioner Periasamy Kumaran

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப்பயணமாக இன்று காலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்றடைந்த முதல்வரை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். 

தமிழ்நாட்டில் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புத்தகங்களும் பூங்கொத்துகளும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள்; சுற்றி வளைத்து கைது செய்த அதிகாரிகள்

முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம் முடிந்து, மே 25ஆம் தேதி ஜப்பான் செல்கிறார். 6 நாட்கள் அங்கு தங்கும் அவர் பயணம் முடிந்து மே 31ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

பயணத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்க இருக்கிறோம். 9 நாள் பயணத்தில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சருமத் உயர் அதிகாரிகளும் வருகின்றனர்" என்றார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட ஐக்கிய அரபு நாடுகள் பயணத்தில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகச் சொன்ன முதல்வர், செல்கின்ற இடங்களிலெல்லாம் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்போம் என்றார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதுதான் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

கடந்த முறை அயல்நாட்டுப் பயணம் மூலம் ரூ.6,100 கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 15,100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். லுலு நிறுவனம் கோவையில் மால் அமைக்கும் பணியை தொடங்கிவிட்டன. சென்னையிலும் இடம் கிடைத்தவுடன் லூலு மால் அமைக்கும் பணிகள் தொடங்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 226 திட்டங்கள் மூலம் 2.95 லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்துள்ளன என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

Aavin vs Amul: தமிழகத்தில் நுழையும் அமுல்! ஆவின் பால் விற்பனைக்கு ஆபத்தா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios