Asianet News TamilAsianet News Tamil

"மாநில உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுக" - தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin : மக்களவை தேர்தலை முன்னிட்டு 5 நாள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இன்று சு. வெங்கடேசனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

Minister Udhayanidhi Stalin Election campaign for Su venkadesan in madurai ans
Author
First Published Mar 24, 2024, 7:29 PM IST

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பக்கமே வரவில்லை என்றும், அவர் வந்த ஒரு முறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க வந்ததாகவும், ஆனால் இன்றளவும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படவில்லை என்றும் உதயநிதி குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் தமிழகத்தை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருவதாகவும் கூறினார். 

அதேபோல மாநில உரிமைகளை பத்தாண்டு கால ஆட்சியில் அதிமுக அடிமைகள் ஒன்றிய பாஜகுக்கு விற்று விட்டதாக குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், இந்த பிரச்சாரமே நம் மாநில உரிமைகளை மீட்பதற்கு முதல்வரின் குரல் என்ற பெயரில் நான் நடத்தி வருவதாக கூறினார். தமிழ் மொழியை வளர்க்க ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு செலவிடவில்லை என்று உதயநிதி கூறியுள்ளார் 

ச்சை... பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பேசுறது... வீடியோவை ரிபீட் செய்து விமர்சிக்கும் அண்ணாமலை

அதே நேரத்தில் ஹிந்தி மற்றும் சமஸ்திகிருதம் ஆகிய மொழிகளை வளர்க்க சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் கற்கும் திறனை ஒன்றிய பாஜக அரசு சீரடிக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

இதுவரை நமது மாணவர்கள்10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வில் எழுதி வந்தனர். ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். கடந்த 10 நாட்களாக தமிழகத்திற்கு அடிக்கடி பிரதமர் மோடி வந்து செல்கிறார். 

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்ட பொழுது அவர் ஏன் சென்னை பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும், அமைச்சர்களும் இந்த வெள்ளத்தில் மக்களோடு மக்களாக தோல் நின்று போராடியதாக கூறினார்.

தேர்தல் முடியும் வரை பாக்கெட்டில் பணமே இருக்கக் கூடாது! அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

Follow Us:
Download App:
  • android
  • ios