ச்சை... பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பேசுறது... வீடியோவை ரிபீட் செய்து விமர்சிக்கும் அண்ணாமலை
வீடியோவில் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு முறை சொன்ன அந்தத் தவறான வார்த்தையை, திரும்பத் திரும்பச் சொல்வது போல எட்டிட் செய்து ரிபீட் மோடில் போட்டுக் காட்டியிருக்கிறார் அண்ணாமலை.
சேலத்தில் பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்த திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகக் காவல்துறையிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் முக்கிய தலைவர்களான காமராஜர், மூப்பனார், ஜெயலலிதா ஆகியோரைக் குறிப்பிட்டு பேசினார். காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் தனக்கு உத்வேகம் அளித்தது என்றும் சொன்னார்.
இதனை தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் இமேஜை டேமேஜ் செய்யும்படி கடுமையாகத் தாக்கினார். சேலத்தில் பிரதமர் மோடி பேசியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "நீங்கள் டெல்லியில் காமராஜரைக் கொல்ல நினைத்த பாவிகள்" என்று சாடினார்.
உதயநிதியை வரவேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பணப் பட்டுவாடா
அப்போது, ஆக்ரோஷமாக ஒரு தவறான வார்த்தையை உபயோகப்படுத்திவிட்டு, நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள் என்று தெரியாதா என்று கேள்வி எழும்பினார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சை அண்ணாமலை விமர்சிக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சின் வீடியோவில் ஒரு சிறிய பகுதியை ட்விட்டரில் வெளியிட்டு அண்ணாமலை தனது கருத்தைச் சொல்லியுள்ளார்.
அந்த வீடியோவில் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு முறை சொன்ன அந்தத் தவறான வார்த்தையை, திரும்பத் திரும்பச் சொல்வது போல எட்டிட் செய்து ரிபீட் மோடில் போட்டுக் காட்டியிருக்கிறார் அண்ணாமலை. அந்தச் சின்ன வீடியோவுக்கு பெரிதாக சப்டைட்டிலும் கொடுத்திருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன அந்த வார்த்தை எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக 'M*****f****r' என்று மொழிபெயர்த்திருக்கிறார்.
மேலும், "பிரதமருக்கு எதிராக இழிவான, மன்னிக்க முடியாத வார்த்தையைப் பேசிப் பேசி தி.மு.க. தலைவர்கள் தரம்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனர். விமர்சனம் செய்வதற்கு வேறு எதுவுமே இல்லாமால் இந்த நிலைக்குச் சென்றுவிட்டனர். மேடையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழிகூட அமைச்சரின் பேச்சை் கண்டிக்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார்.
"இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கிறோம்" எனவும் அண்ணாமலை சொல்லியிருக்கிறார்.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதி!