நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பாஜக அழுத்தத்தால் விஜய் மக்களை திசை திருப்புவதாக அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Minister Sivasankar criticizes Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய கூட்ட நெரிசல் விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, ஏராளமான மக்கள் திரண்ட கூட்டத்தில் கட்டுக்கடங்காத நெரிசல் ஏற்பட்டது. சிலர் மரங்களில் ஏறி பார்க்க முயன்றபோது கிளைகள் உடைந்து விழுந்ததும், கூட்டம் நகர்ந்தபோது தள்ளுமுள்ளும் ஏற்பட்டதும் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதையடுத்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர் உயிர் பலி- களத்தில் தமிழக அரசு
சம்பவம் நடைபெற்ற போது அனைத்து தலைவர்களும் கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவெக தலைவர் விஜய் மற்றும் அடுத்தக்கட்ட தலைவர்கள் சென்னையை நோக்கை படையெடுத்தனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரங்களில் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து இழப்பீடு அறிவித்தார். இதை போல அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். ஆம்புலன்ஸ் வசதி, சிகிச்சை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தவெக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கே வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கவில்லை.
வீடியோ வெளியிட்ட விஜய்
இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக அரசு மற்றும் திமுக மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள். ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் இல்ங்கை, நேபாளத்தில் வெடித்தது போல் புரட்சி வெடிக்க வேண்டும் என இளைஞர்களை தூண்டி விடும் பதிவை வெளியிட்டிருந்தார். இதே போல தவெக தலைவர் விஜய்யும், சிஎம் சார் .. என்னைய பழிவாங்க என்னைய வேண்டு என்றாலும் செய்து கொள்ளுங்க.. எனது தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க என பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விஜய்க்கு எதிராக அமைச்சர் சிவசங்கர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்,
விஜய் பின்னணியில் பாஜக
"பாஜகவின் நெருக்கடி தாங்க முடியாமல் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டு, மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற நினைக்கிறார். அவருடன் சேர்ந்து ஆதவ் அர்ஜுனா போன்றவர்களும் பாஜகவுக்கு பயந்து செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிய வருவதாகுவும் சிவசங்கர் கூறினார். கூடத்தில் தொண்டர்கள் மயங்கி விழுந்தபோதிலும், விஜய் அதை பார்த்துக் கொண்டே தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். எனவே ஒரு தலைவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக விஜய் இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையோ, சிகிச்சையில் உள்ளவர்களையோ வந்துகூட பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக நின்று, அனைத்தையும் செய்தது திமுகவைச் சேர்ந்தவர்களும், அதிமுகவை சேர்ந்தவர்களும் தான். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் துணை நின்றனர். எனவே விஜய் மக்களுக்கான தலைவராக இல்லையென கடுமையாக விமர்சித்தார்.
