- Home
- Tamil Nadu News
- விஜய் கேரவன் வண்டியில் 4 பக்கமும் CCTV கேமரா...! புட்டேஜ் வாங்கி பார்த்தாலே உண்மை வெளியாகும்
விஜய் கேரவன் வண்டியில் 4 பக்கமும் CCTV கேமரா...! புட்டேஜ் வாங்கி பார்த்தாலே உண்மை வெளியாகும்
நடிகர் விஜய்யின் கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் அரசியல் ரீதியாக விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கேரவன் சிசிடிவி
செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. உங்க விஜய் நான் வரேன்' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் பயணம், சனிக்கிழமை வார இறுதி நிகழ்ச்சிகளாக தொடர்ந்து வருகிறது. கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டம், அதிகரித்த மக்கள் கூட்டத்தால் விபரீதமானது.த.வெ.க. காவல்துறையிடம் அனுமதி கோரியபோது, சுமார் 10,000 பேர் பங்கேற்பர் என்று தெரிவித்திருந்தனர்.
கரூர் நெரிசலுக்கு காரணம்
விஜயின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரச்சார வாகனத்தில் விஜய் பேசத் தொடங்கியபோது, மக்கள் அவரை நெருங்க முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் .இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. கூட்டத்திற்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், திடீரென இரண்டு ஆம்புலன்சுகள் வந்ததாகவும் காணொளிகள் வெளியானது.
இரங்கல் தெரிவித்த விஜய்
இருப்பினும், தமிழ்நாடு மின்வாரியம் (TNEb) இதை மறுத்து, தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், ஜெனரேட்டர்கள் நெரிசலால் அணைந்ததாகவும் தெரிவித்தது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் விஜய். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் கூறியது. முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தோருக்கு தலா 10 லட்சம், சிகிச்சை பெறுவோருக்கு 1 லட்சம் நிவாரணம் அறிவித்து, இரவு 1 மணிக்கு கரூரைச் சென்று ஆறுதல் கூறினார். துணை முதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் சென்றனர்.
விஜய் பிரச்சார வாகனம்
இச்சம்பவம் அரசியல் ரீதியாக விஜய்க்கு பின்னடைவாக மாறியுள்ளது. இது தொடர்பாக அரசியல் விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகாரிகள் கூறுவது, CCTV மூலம் நேரடியாக நிகழ்வு எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகின்றனர். மேலும், அந்த பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் கூட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா, அதனால் நிகழ்வு ஏற்பட்டதா என்பதும் தெளிவாக தெரிந்துவிடும்.
கேரவன் கேமரா பதிவு
இது எதிர்காலத்தில் பொது நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக நடைபெறுவதற்கான முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாறும் என்றும் கூறுகின்றனர். கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பல வெளியாகி வரும் நிலையில், அந்த கூட்டத்தில் நடந்தது என்னவென்று தெரிந்து கொள்ள இந்த கேமரா நிச்சயம் உதவும். சமூக ஆர்வலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், “புட்டேஜ் வாங்கி பார்க்க வேண்டும்” என்று சொல்வது, உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்த உதவும். விஜயின் கேரவன் வண்டியில் உள்ள சிசிடிவி கேமரா உயரமாக உள்ளதால், நிச்சயம் இச்சம்பவம் குறித்த தெளிவை உண்டாக்கும் என்று கூறுகின்றனர்.