உதயசூரியன், கை சின்னத்திற்கும் தான் வாக்கு வருகிறது... கூட்டணியில் இருப்பவர்களை பார்ப்பதில்லை- ராஜகண்ணப்பன்
தென் மாவட்டங்களில் எந்த சாதி பிரச்சனையும் இல்லை , நான் நின்றது தேவர் தொகுதியில் தான் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். எனவே அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
சட்டசபை- பிறப்படுத்தப்பட்டோர் துறை அறிவிப்பு
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை பதிலூரையின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த சலவை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளில் 73 லட்சம் ரூபாய் செலவில் வழங்குதல் .
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 658 விதிகளுக்கு டிடிஎச் இணைப்புடன் எல் இ டி தொலைக்காட்சி 2 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும். சீர் மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் உதவித்தொகைகள் இணையவழி சேவைகள் மூலம் ஒருங்கிணைத்து செயலாக்கம் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்..
தென் மாவட்டங்களில் சாதி பிரச்சனை இல்லை
இதனை தொடர்ந்து பேசியவர், உதயசூரியன், கை சின்னத்திற்கும் தான் இங்கு வாக்கு வருகிறது. கூட்டணியில் இருப்பவர்களை பார்ப்பதில்லை, தனி மனிதர்களை பார்த்து வாக்கு வருவது இல்லை அனைவரும் அதை புறிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நேற்று தென் மாவட்டங்களில் சாதி பிரச்சனை என்றார் தென் மாவட்டங்களில் எந்த சாதி பிரச்சனையும் இல்லை , நான் நின்றது தேவர் தொகுதியில் தான் 30000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் .அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்றார். அனைத்து சமூகங்களுக்கும் சமமாக உள்ளதுதான் சமூக நிதி, சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் மத்திய அரசு அதனை செய்ய வேண்டும்.
கதர் சொசைட்டியில் திமுகவினர்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே நாம் அதை வைத்து பிரதிநிதி துவம் கொடுக்கலாம், கள்ளர் பள்ளிகள் அந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் அதை மட்டுமே நாம் அமல் படுத்த முடியும் நாம் அதில் தலையிட முடியாது. 60 கதர் சொசைட்டியில் தலைவர்கள் நியமித்து உள்ளோம். எல்லோரும் திமுக தான். அதிமுக எல்லாம் முடுஞ்சு போச்சு.அவங்க இருந்த அப்போ அவங்க,நம்ம இப்போ என்றார் இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.