அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சரும் மாவட்ட ஆட்சியரும் மேடையிலேயே தூங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு துறை சார்பில் பல்பொருள் அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா பழனியில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் வினய் கலந்து கொண்டார்.

இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கும்போது அதிக வேலையின் காரணமாக ஏற்பட்ட அசதியிலேயே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையிலேயே தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிறிது நேரம் கண் அசந்தார் என்று  தெரிவித்து உள்ளனர். அதேபோன்று அதேபோன்று இவருக்கு அருகில் அமர்ந்து இருந்த மாவட்ட ஆட்சியர் வினய் கூட சில நொடிகள் கண் அசந்தார்.

இதனைக் கண்ட விழாவில் கூடியிருந்த பொதுமக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். விழா மேடையில் அவ்வளவு சப்தமாக உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது அதையும் மீறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் இவர்கள் இருவரும் சற்று கண் அசந்தது அந்த விழாவில் கூடியிருந்த பொதுமக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.