நாளை உருவாகிறது புயல்.. புரட்டி எடுக்கப் போகும் கனமழை.. எந்தெந்த இடங்களில் தெரியுமா?

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.

Michaung  Cyclone Update Low depression area in bay of bengal strengthened to deep depression imd report Rya

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 510 கி.மீ கிழக்கு, தென் கிழக்கிலும், புதுச்சேரிக்கு 500 கி.மீ கிழக்கு தென் கிழக்கிலும், நெல்லூருக்கு 630 கி.மீ தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டனம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரையிலும் அவ்வப்போது 80 கி.மீ வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வரும் 4-ம் தேதி திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறிப்பாக டிசம்பர் 3,-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 4-ம் தேதி சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வரையிலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்தக்காற்று வீசக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 80 கி.மீ வரையிலும் பலத்தக்காற்று வீசக்கூடும்.

அடுத்து வரும் 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரை இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என்றும் 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai: தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு; இது தமிழக மக்களின் சாபக்கேடு - அண்ணாமலை விமர்சனம்

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ காஞ்சிரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய திடீரென மழை பெய்யும், திடீரென சூரியன் இருக்கும். இன்று முழுவதும் வானிலை நிலவரம் இப்படி தான் இருக்கும். புயல் வலுவடையும் போது மேகங்கள் நெருக்கி மழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 3, 4, 4 ஆகிய தேதிகளில் மழை இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios