திருவள்ளுவா் தினம்... தமிழகம், புதுவையில் இன்று இறைச்சி கடைகளை திறக்க தடை!!
திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று தமிழகம், புதுவையில் இறைச்சிகளை மூட அந்தந்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று தமிழகம், புதுவையில் இறைச்சிகளை மூட அந்தந்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுவா் தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜன.16) இறைச்சி கடைகளுக்கு தடை விதிப்பதாக தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு உத்தரவின் படி 16.01.2023 திங்கட்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அதி காலை 12 மணி முதல் இரவு 12 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்தவித உயிரினங்களையும் இறைச்சிக்காகவோ அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ வதை செய்யவோ அல்லது மாமிசத்தை விற்பனை செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேலத்தில் இன்று மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு... 28 காளைகளை அடக்கிய விஜய் என்பவருக்கு முதல் பரிசு!!
அரசின் உத்தரவிற்கிணங்க, சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை அடைத்து மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசின் உத்தரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சிக் கடைகளின் உரிமையாளா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். மதுரையிலும் அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆடு மாடு கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றையும் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்க கூடாது மீறி செயல்படுவது கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரப் பிரிவு சட்டம் 1939 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சிம்ரன் ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பட்டப்பகலின் பைக் திருட்டு... சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் மற்றும் வள்ளலார் தினத்தையொட்டி இன்று (ஜன.16) இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிசம் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தினத்தில் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் மூடியிருக்க வேண்டும். மீறி இயங்கினால் இறைச்சி, மீன்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் பறிமுதல் செய்து, கடைகள், இறைச்சி கூடங்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும் விற்பனையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.