Asianet News TamilAsianet News Tamil

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்.. மக்களே வீடுகளை விட்டு வெளியே வராதீங்க.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் சிறுத்தையின் கால் தடம் உள்ளதை  பொதுமக்கள் காண்பித்தனர். 

Mayiladuthurai Leopard movement.. private school Holiday tvk
Author
First Published Apr 3, 2024, 9:20 AM IST | Last Updated Apr 3, 2024, 9:26 AM IST

மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் சிறுத்தையின் கால் தடம் உள்ளதை  பொதுமக்கள் காண்பித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் மற்றும் வனத்துறை ஆய்வு செய்த போது நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதனால் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வனத்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 2 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. சென்னை வானிலை மையம்!

சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

இதையும் படிங்க: Chennai Crime News: உல்லாசத்துக்கு மறுப்பு.. சித்தாளை கதறவிட்ட மேஸ்திரி.. இறுதியில் நடந்தது என்ன?

சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை அருகில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios