5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 47 வயது நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 47). இவர் கடந்த 10.6.2022 அன்று அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் உடலில் ஏற்பட்ட வலியின் காரணமாக சிறுமி தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவரது உடல் நிலையை கண்டு தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 11.6.2022ம் தேதி சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி வழக்கு பதிவு செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்த வந்த நிலையில் இந்த வழக்கு மகிளா நீதிமன்றதில் விசாரிக்கப்பட்டது.
குமரியில் கந்துவட்டி கொடுமையால் பேருந்து உரிமையாளர் தற்கொலை
வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தீர்ப்பை வாசித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, சரவணன் குற்றவாளி என அறிவித்தார். மேலும் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு படுபாதக செயலில் ஈடுபட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அரசு சார்பில் சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் கூறினார். இதனைத் தொடர்ந்து சரவணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்? காவல்துறை எச்சரிக்கை